அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. எச்1பி விசா குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா!

H1B Visa Fees Clarification | அமெரிக்க அரசு வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா கட்டணம் குறித்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் கவலை அடைந்து வந்த நிலையில், தற்போது அந்த விசா கட்டணம் குறித்து அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி.. எச்1பி விசா குறித்து விளக்கம் அளித்த அமெரிக்கா!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Oct 2025 12:08 PM

 IST

வாஷிங்டன், அக்டோபர் 22 : அமெரிக்க அரசு (American Government) எச்1பி விசா (H1B Visa) குறித்து  வெளியிட்ட அறிவிப்பு அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், எச்1பி விசா கட்டணம் குறித்து அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன் காரணமாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய பொறியாளர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. இந்த நிலையில், எச்1பி விசா குறித்து அமெரிக்கா அரசு கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எச்1பி விசா குறித்து விளக்கம் அளித்த அமெரிக்க அரசு

அமெரிக்க  அதிபராத இரண்டாவது முறையாக பதவியேற்றது முதலே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (American President Donald Trump) அமெரிக்காவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் அவர் அறிமுகம் செய்தார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். அந்த அறிவிப்பு அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : Earthquake : பிலிப்பைன்ஸை உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு!

புதிய கட்டண முறைகள் கூறுவது என்ன?

புதிய விதிகளின்படி, எச்1பி விசாவில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றால் அந்த நிறுவனம் அந்த ஊழியருக்கு ரூ.1 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் ஆகும். அமெரிக்க அரசின் இந்த அறிவிப்பு இந்தியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த கட்டண மாற்றம் யாருக்கு என அமெரிக்கா தெளிவாக விளக்கம் அளிக்காத நிலையில், பலரும் கடும் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

இதையும் படிங்க : மலேசியாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்.. 6,000 மாணவர்கள் பாதிப்பு!

புதிய விதிகள் குறித்து விளக்கமளித்த அமெரிக்கா

எச்1பி விசா புதிய விதிகள் என்ன கூறுகின்றன என்று தெரியாமல் பலரும் தவித்து வந்த நிலையில், அமெரிக்க அரசு அது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஏற்கனவே எச்1 பி விசா வைத்திருக்கும் நபர்களுக்கு இந்த விதி பொருந்தாது என்று கூறியுள்ளது. மேலும், தற்போது மாணவர் விசாக்கள், தொழில்முறை விசாக்கள் உள்ளிட்ட அமெரிக்க விசாக்களை வைத்திருப்போர் எச்1பி விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த புதிய கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.