H-1B விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.. இனி கூடுதலாக ரூ.21,000 செலுத்த வேண்டும்!

America Increased H-1B Visa Fees | அமெரிக்க அரசு H-1B விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், இந்திய பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என பலரும் பரவலாக பயன்படுத்தும் இந்த விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியுள்ளதால், அமெரிக்காவுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

H-1B விசா கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா.. இனி கூடுதலாக ரூ.21,000 செலுத்த வேண்டும்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Jul 2025 09:56 AM

அமெரிக்கா, ஜூலை 11 : H-1B விசாவுக்கான கட்டணங்களை (H-1B Visa Price) அமெரிக்க அரசு (America Government) அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விசாவை மாணவர்கள், இந்திய பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், இந்த கட்டணம் உயர்வு காரணமாக அவர்கள் கடும் சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், H-1B விசாவுக்கான கட்டணத்தை அமெரிக்க அரசு எவ்வளவு உயர்த்தியுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

H-1B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்திய அமெரிக்கா

மாணவர்கள், இந்திய பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் பயன்படுத்தும் விசாவாக உள்ளது தான் H-1B. இந்த நிலையில் இந்த விசா கட்டணத்தை அமெரிக்க அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதாவது 250 டாலர்கள் வரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000 வரை இந்த விசா கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது பாதுகாப்பு வைப்பு தொகை என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பணம் வீக்கத்திற்கு ஏற்ப உயர்த்தப்படும் இந்த கட்டணம், 2026 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் சில அளவுகோல்களை பூர்த்தி செய்தால் அந்த தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிரடியாக உயர்ந்த H-1B விசா கட்டணம்

கட்டணத்தை திரும்ப பெற பூர்த்தி செய்ய வேண்டிய அளவுகோல்கள்

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா செல்லும் மக்கள், அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்களை பின்பற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க விசா கணக்கீடு முடிந்தவுடன், அதனை நீட்டிக்க கோரிக்கை வைக்காமல் அமெரிக்காவை விட்டு வெளியேறுபவர்களுக்கு இந்த இருப்பு தொகை திரும்ப வழங்கப்படும்.

இதையும் படிங்க : இனி துபாய் ஈஸியா போலாம்.. வந்தது கோல்டன் விசா.. இவ்வளவு தானா? எப்படி பெறுவது?

அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதலே சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் வகையில், டொனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சட்டவிரோத குடியேரிகளை குறைக்கும் வகையில் அவர் இந்த கட்டண உயர்வை அமலுக்கு கொண்டுவந்துள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.