அலஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டங்கள்.. சுனாமி எச்சரிக்கை?

7.3 Magnitude Earthquake Strike Alaska | அலஸ்காவில் 7.3 மேக்னிடியூட் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அலஸ்காவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அலஸ்காவில் பயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டங்கள்.. சுனாமி எச்சரிக்கை?

வைரல் வீடியோ

Updated On: 

17 Jul 2025 10:10 AM

அலஸ்கா, ஜூலை 17 : அலஸ்காவில் (Alaska) மிக கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். அங்கு 7.3 மேக்னிடியூட் (Magnitude) அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கட்டடங்கள் முழுமையாக குலுங்கியுள்ளன. இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது திரும்ப பெற்றப்பட்டது. இருப்பினும் நிலநடுக்கத்தின் அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் வெளியே வராததால் அங்கு சற்று பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அலஸ்காவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்

அமெரிக்காவின் அலஸ்காவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் தீவு நகரமான சாண்ட் பாயிண்டில் (Sand Point) இருந்து தெற்கே சுமார் 54 கிலோ மீட்டர் தூரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 15.2 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் வளிமையாக இருந்த நிலையில், அது அங்கு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு கடும் பீதியில் உரைந்துள்ளனர்.

7.3 மேக்னிடியூட் நிலநடுக்கம் – குலுங்கிய கட்டங்கள்

சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது

நிலநடுக்கத்தை தொடர்ந்து தெற்கு அலாஸ்கா மற்றும் பெனின்சுலா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்ப வாபஸ் பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதி நிலவுகிறது.

இதையும் படிங்க : ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

அலஸ்கா முழுவதும் ஒலித்த சுனாமி எச்சரிக்கை

அலஸ்காவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.