சீனா சுரங்க விபத்து.. 82 பேர் பலியான சோக நிகழ்வு.. மீட்பு பணிகள் தீவிரம்!
82 Killed In Mine Accident In China | சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் கேஸ் வெடித்த நிலையில், வெடி விபத்தில் சிக்கி 82 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் இன்னும் 9 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஷான்சி, மே 23 : சீனாவில் (China) உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாக 82 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுரங்கத்துக்குள் இருந்த கேஸ் வெடித்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏற்பகனவே பலர் உயிரிழந்துள்ள நிலையில், சிலர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீனாவில் வெடிவிபத்துக்கு உள்ளான நிலக்கரி சுரங்கம்
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று (மே 22, 2026) இரவு 7.29 மணிக்கு கேஸ் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தவர்கள் 82 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், 9 பேர் இந்த சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : அமெரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்.. ரஷ்ய எண்ணெய் கொள்முதலுக்கு 30 நாட்கள் விலக்கு!
தீவிரமாக நடைபெற்று வரும் மீட்பு பணிகள்
இந்த விபத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், முழுமையான மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கே பெருமை.. பிரதமர் மோடிக்கு ஸ்வீடனின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார்’!
இந்த சுரங்க விபத்து அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவின் துணை பிரதமர் ஜாங் குவோசிங் தலைமையிலான குழு, சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை கண்காணித்து வருகிறது. 82 பேர் பலியான இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சிலர் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.