போருக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய லேசான நிலநடுக்கம்.. 4.3 ரிக்டராக பதிவு!

4.3 Magnitude Earthquake Strikes Iran | ஈரான் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் மிக கடுமையான சேதங்களையும், இழப்புகளையும் சந்தித்துள்ளது. இந்த நிலையில், ஈரானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

போருக்கு மத்தியில் ஈரானை உலுக்கிய லேசான நிலநடுக்கம்.. 4.3 ரிக்டராக பதிவு!

மாதிரி புகைப்படம்

Published: 

03 Mar 2026 16:27 PM

 IST

ஜெராஷ், மார்ச் 03 : ஈரான் (Iran) தற்போது மிகவும் நெருக்கடியான சூழலில் உள்ளது. அந்த நாட்டில் ஏற்கனவே போரால் மிக கடுமையான சிக்கல்கள் நிலவி வரும் நிலையில், தற்போது ஈரானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் (Israel) மற்றும் அமேரிக்கா (America) தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தற்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அமெரிக்கா

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. அணு ஆயுதங்களை தயாரிப்பது தொடர்பாக எழுந்த சிக்கலின் காரணமாக பிப்ரவரி 28, 2026 அன்று முதல் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானை தாக்கி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானின் உட்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் காரணமாக ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதையும் படிங்க : அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை.. ஈரான் திட்டவட்டம்!

ஈரானை உலுக்கிய 4.3 ரிக்டர் நிலநடுக்கம்

ஈரானின் தெற்கே உள்ள பார்ஸ் மாகாணத்தில் ஜெராஷ் நகரில் இருந்து வடமேற்கே சுமார் 52 கிலோ மீட்டர் தூரத்தில் மதியம் சரியாக 12.24 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் வெளிவராமல் உள்ளது.

இதையும் படிங்க : Khamenei : இறுதி மூச்சு வரை சவால்.. யார் இந்த அலி கமேனி? ஈரான் உச்சதலைவரின் வரலாறு!

ஈரான் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களின் காரணமாக அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் உட்பட சுமார் 700 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இது ஈரானை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ