சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ – மாரடைப்பால் உயிரிழந்த 19 வயது மாணவி – பரபரப்பு சம்பவம்

Deadly Social Media Trend : அமெரிக்காவை சேர்ந்த 19 வயது மாணவி சமூக வலைதளங்களில் பரவும் டஸ்டிங் என்ற சேலஞ்ச்சை பின்பற்றி விபரீத செயலில் இறங்கியிருக்கிறார். இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - மாரடைப்பால் உயிரிழந்த 19 வயது மாணவி - பரபரப்பு சம்பவம்

மாதிரி புகைப்படம்

Published: 

09 Jun 2025 21:40 PM

சமூக வலைதளங்களில் (Challenge) ஏதாவது ஒரு சேலஞ்ச் அடிக்கடி டிரெண்டாகி வருவது வழக்கம். சேலஞ்ச் என்ற பெயரில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு வருவதும் அது சர்ச்சையாவதும் வழக்கம் . அந்த வகையில் அமெரிக்காவின் (America) அரிசோனாவில் வசித்து வந்த 19 வயதான ரென்னா ஓ’ருர்க் என்ற இளம் பெண், “டஸ்டிங்” எனப்படும் ஒரு ஆபத்தான டிரெண்டை (Trend) பின்பற்றியதன் காரணமாக உயிரிழந்திருக்கிறார். இந்தச் சவாலின் போது, சிறுமி கீபோர்டு சுத்திகரிப்பு ஸ்ப்ரேயை சுவாசித்துள்ளார். இதனால் மாரடைப்பு ஏற்பட்டு நான் நாட்கள் கோமாவில் இருந்து பின்னர் பின்னர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சேலஞ்சில் ஈடுபட்டவர்கள் குறித்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

டஸ்டிங் என்றால் என்ன?

இந்த சேலஞ்ச் டஸ்டிங்” (Dusting), குரோமிங் (Chroming) அல்லது ஹஃபிங் (Huffing) என்றும் அழைக்கப்படுகிறது. இது வீடியோக்கள் மூலம் தங்களை பிரபலமாக்கிக் கொள்வதற்காக, வீடுகளில் தூயமைக்காக பயன்படுத்தும் ஸ்ப்ரேகளை மூக்கின் வழியாக சுவாசிக்கும் ஒரு ஆபத்தான முயற்சியாகும். இதனால், சிறிது நேரம் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது. ஆனால் இது உடனடி மாரடைப்பை ஏற்படுத்தி உயிரை பறிக்கும் அபாயம் கொண்டது.

ரென்னாவின் பெற்றோர் என்ன சொல்கிறார்கள்?

இதுகுறித்து ரென்னாவின் அப்பா ஆரன் ஓர்க், ”நான் பிரபலமாகப் போறேன் அப்பா என்று சொல்லிக்கொண்டே இருந்தார் என அவர் கூறி வந்தார். ஆனால் அதற்காக அவர் இத்தகையை நடவடிக்கைகளில் இறங்குவார் என நினைத்து கூட பார்க்க வில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். ரென்னாவின் தாய் ஒரு அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து ரென்னாவின் தாய் டானா ஓ’ருர்க் கூறும்போது, “இந்த ஸ்ப்ரேகளை வாங்க ஐடி தேவையில்லை. இவ்வகை ஸ்பிரேக்களில் வாசனை இருக்காது. அடையாளமாக எதுவும் தெரியாது. அதனால்தான் இளைஞர்கள் இதை விரும்புகிறார்கள். வீட்டில் பெற்றோர்களுக்கும் தெரியாமல் இதை செய்கிறார்கள்” என வேதனையுடன் கூறினார்.

டஸ்டிங் சேலஞ்சால் உயிரிழந்த இளம்பெண்

 

பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இந்த சம்பவம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறைகள் மற்றும் போன்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பது சரி தான். ஆனால் அவர்களை கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் அறைகளில் பயன்படுத்தும் பொருட்களை ஆராயுங்கள். நீங்கள் இப்படி செய்வது அவர்களின் உயிரைக் காப்பாற்றலாம் என்கிறார்.

இதற்கு முன் நடந்த சம்பவங்கள்

கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச்சில், இங்கிலாந்தில் 11 வயது சிறுவன் ஒருவனும் இதே போல டிக்டாக் வீடியோக்களைப் பார்த்து ‘ஹஃபிங்’ செய்து உயிரிழந்த சம்பவம் அப்போது பேசு பொருளானது. சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற சேலஞ்ச் வீடியோக்கள் எவ்வளவு அபாயகரமானவை என்பதை இந்த சம்பங்கள் மீண்டும் ஒருமுறை நமக்கு சொல்கிறது. பெற்றோர் மற்றும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.