’காமராஜர் விவகாரம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது’ செல்வப்பெருந்தகை பேச்சு!

Selvaperunthagai Press Meet : முதல்வர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று சந்தித்துள்ளார். இதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காமராஜர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். காமராஜர் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என கூறினார்.

Updated On: 

18 Jul 2025 21:48 PM

சென்னை, ஜூலை 18 : முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி.டி.ஆர்.பாலு ஆகியோர் 2025 ஜூலை 18ஆம் தேதியான இன்று சந்தித்து பேசியுள்ளனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகையிடம் காமராஜர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோயிவிட்டது என்றும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.