Viral Video : பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண்.. காரணம் இதுதான்.. சுவாரஸ்ய கதை!
Young Woman Drives Auto in Bengaluru | தற்போதைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். ஆனால், ஒருசில பெண்கள் மட்டுமே ஓட்டுநராக உள்ளனர். அந்த வகையில், பெங்களூரில் இளம் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான, வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதில் சில வீடியோக்கள் வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கும். அந்த வகையில் பெங்களூருவில் இளம் பெண் இருவர் ஆட்டோ ஓட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. பொதுவாக ஆட்டோ, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை பெரும்பாலும் ஆண்களே ஓட்டும் நிலையில், பெண் ஓட்டுநர்களை பார்ப்பது அரிதாக உள்ளது. இந்த நிலையில், பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூரில் ஆட்டோ ஓட்டும் இளம் பெண் – வியப்பூட்டும் வீடியோ
பொதுவாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெரிய நகரங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்துகளான ஆட்டோ, பேருந்து உள்ளிட்டவற்றுக்கு ஆண்களே ஓட்டுநர்களாக இருக்கின்றனர். இந்த நிலையில், அரிதாக ஒருசில பெண்களும் இத்தகைய பொது போக்குவரத்து வாகனங்களை ஓட்டுகின்றனர். அந்த வகையில், பெங்களூரில் இளம் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டும் வீடியோ அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சீனாவில் போக்குவரத்தை சரிசெய்யும் ரோபோ.. ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் இளம் பெண்ணின் வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், ஆட்டோவில் பயணிக்கும் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டும் பெண்ணிடம் சில கேள்விகளை கேட்கிறார். அதாவது, நீங்கள் எப்படி இந்த வேலையை செய்கிறீர்கள் என்று அந்த பெண் கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அந்த இளம் பெண், எனக்கு வாகனம் ஓட்ட பிடிக்கும். கார், பைக், ஆட்டோ எதுவாக இருந்தாலும் எனக்கு அவற்றை ஓட்ட பிடிக்கும். கார் வாங்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால் எனது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆட்டோவை வாங்கியுள்ளேன். எதிர்காலத்தில் முடிந்தால் கார் வாங்குவேன் என்று கூறுகிறார்.
இதையும் படிங்க : அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்ற நபர்.. விடாமல் துரத்திய யானை.. வைரல் வீடியோ!
தொடர்ந்து பேசும் அந்த பெண், நான் என்றைக்கும் வேலைக்கு போக கடினமாக உணர்ந்தது இல்லை. அது திங்கள் கிழமையாக இருந்தாலும் சரி, வாரத்தின் எந்த நாளாக இருந்தாலும் சரி ஒவ்வொரு நாளும் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் வேலைக்கு செல்வேன் என்று கூறுகிறார். அப்போது பெற்றோர்கள் இதற்கு என்ன சொன்னார்கள் என அந்த பெண் கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அந்த இளம் பெண், முதலில் எனது தாய் அஞ்சினார். ஆனால் அவருக்கு தெரியும். நான் மிகவும் தைரியமான பெண், என்னால் அனைத்தையும் சமாளிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.