Viral Video : நள்ளிரவு 3 மணிக்கு பெண்ணுக்கு நடந்த 2 சம்பவங்கள்.. வைரல் வீடியோ!

Woman Shared Her Story Of Reaching Home Safely In Chennai | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், பெண் ஒருவர் நள்ளிரவு 3 மணிக்கு பெங்களூரில் பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்தது தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Viral Video : நள்ளிரவு 3 மணிக்கு பெண்ணுக்கு நடந்த 2 சம்பவங்கள்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

08 Apr 2026 13:54 PM

 IST

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெண்கள் இரவில் தனியாக நடமாட முடியாது பாதுகாப்பற்ற சூழல் நிலவுகதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில் பெண் ஒருவர், நள்ளிரவு 3 மணிக்கு பெங்களூருவில் தான் மிகவும் பாதுகாப்பாக பயணம் செய்ததாக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நள்ளிரவு 3 மணிக்கு பெங்களூரில் பாதுகாப்பாக பயணம் செய்த பெண்

இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இரவில் வெளியே அனுப்ப யோசிக்கின்றனர். வேறு வழியின்றி இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்களும் மிகுந்த பயத்துடனே பயணம் செய்கின்றனர். அந்த வகையில், வெளியூருக்கு சென்று நள்ளிரவு மூன்று மணிக்கு பெங்களூருக்கு திரும்பிய பெண் ஒருவர் தான் மிகவும் பாதுகாப்பாக வீட்டிற்கு வந்து சேர்ந்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : பயணியை மது வாங்கிவர கூறிய ஊபர் ஆட்டோ ஓட்டுநர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் பெண், நான் நள்ளிரவு மூன்று மணிக்கு பெங்களூரு வந்து இறங்கினேன். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல கேப் புக் செய்ய முயற்சி செய்தேன். நீண்ட நேரம் ஆகியும் கேப் கிடைக்கவில்லை. அப்போது எனக்கு வண்டி கிடைக்கும் வரை நான் வந்த பேருந்தின் ஓட்டுநர் எனக்கு துணை நின்றார். மூன்று கிலோமீட்டர் தூரம் என்பதால் கேப் புக் ஆகவில்லை என்று, ரேபிடோ பைக் புக் செய்தேன். ஒருவர் என்னை பிக் செய்ய வந்தார். வண்டியில் ஏறிய பிறகு எவ்வளவு கட்டணம் என கேட்டேன்.

இதையும் படிங்க : Viral Video : வகுப்பறையில் மாணவிக்கு ப்ரொபோஸ் செய்த ஆசிரியர்.. வைரல் வீடியோ!

அவர் வீட்டிற்கு மேப் போட கூறினார். இறங்கும் இடம் வந்ததும் மீண்டும் விலை கேட்டேன், நள்ளிரவில் பயணம் செய்கிறீர்கள். உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டியது என் கடமை. நீங்கள் எவ்வளவு கொடுக்க விரும்புகிறீர்களோ கொடுங்கள் என்று கூறினார் என்று அந்த பெண் மிகவும் நெகிழ்ச்சியுடன் தனது கதையை பகிர்ந்துக்கொண்டுள்ளார்.

Follow Us
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
ஆர்தமெஸ் 2 எடுத்த முதல் படத்தை பகிர்ந்த நாசா
புதிய கப்பல் வழித்தடம் - முடிவுக்கு வரும் எரிபொருள் பற்றாக்குறை
கேஸ் சிலிண்டருக்காக 40 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை - என்ன நடக்கிறது?