Viral Video : ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ வாங்க இணையத்தில் நிதி கோரிய பெண்.. வைரலாகும் வீடியோ!
Woman Seeks Donations for iPhone 17 Pro | ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க இளம் பெண் ஒருவர் இணையத்தில் நிதி கோரும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் (Apple 17 Series Smartphones) கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகமான நிலையில், அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் இளம் பெண் ஒருவர் ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக இன்ஸ்டாகிராமில் அனைவரிடமும் நிதி கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆப்பிள் ஐப்போன் வாங்க இன்ஸ்டாவில் நிதி திரட்டிய இளம் பெண்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்கள் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஐபோனை வாங்க பெரும்பாலான மக்கள் முந்தி அடித்துக்கொண்டு ஓடும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில், ஐபோன் வாங்க பண உதவி செய்யக்கோரி பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : ரகசியமாக புகைப்படம் எடுத்த நபர்.. தைரியமாக தட்டிக் கேட்ட பெண்.. குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
लखीमपुर की ब्यूटी क्वीन माही सिंह एक एक,दो दो रुपये मांग रही है 17 प्रो मैक्स फोन लेने के लिए….. pic.twitter.com/YvpoJymsH9
— Sajid Ali (@Sajid7642) September 25, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசும் இளம் பெண், ஐபோன் 17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் நிறம் எனக்கு பிடித்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு எனது தந்தை ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்கி கொடுத்தார். அக்டோபர் 21, எனது பிறந்த நாள் வரும் நிலையில் அப்போது எனக்கு புதிய ஐபோன் வேண்டும் என எனக்கு ஆசை. ஆனால், எனது தந்தை எனக்கு புதிய ஐபோனை வாங்கி தர மறுக்கிறார் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video : வெறும் ரூ.50-க்கு மருத்துவம்.. இந்தியாவின் மருத்துவ வசதி குறித்து வியந்து வீடியோ பதிவிட்ட வெளிநாட்டு பெண்!
வீடியோவில் தொடர்ந்து பேசிய அந்த இளம் பெண், நீங்கள் அனைவரும் ஒன்று, இரண்டு, மூன்று ரூபாய் கொடுத்து உதவி செய்தால் என்னால் புதிய ஐபோனை வாங்க முடியும். இது நடந்தால் நான் எனது மனதார நன்றி சொல்வேன். அது என்னுடைய கனவை நினைவாக்க விரும்பும் என்றும் அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.