Viral Video : சுடுகாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்த பெண்.. திகிலில் உறைந்த டெலிவரி ஊழியர்!

Woman Ordered Food From Graveyard | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் சுடுகாட்டில் இருந்து உணவு ஆர்டர் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் , கடும் கண்டனங்களை பெற்று வருகிறது.

Viral Video : சுடுகாட்டில் இருந்து உணவு டெலிவரி செய்த பெண்.. திகிலில் உறைந்த டெலிவரி ஊழியர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

03 Feb 2026 12:09 PM

 IST

வாரணாசி, பிப்ரவரி 03 : உணவு உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்களின் இடத்திற்கு சென்று டெலிவரி செய்யும் டெலிவரி ஊழியர்கள் கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு டெலிவரி ஊழியர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சிக்கல்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், பெண் ஒருவர் சுடுகாட்டில் இருந்து உணவு ஆர்டர் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

கல்லறையில் இருந்து உணவு ஆர்டர் செய்த பெண்

உணவு டெலிவரி ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு உள்ளிட்ட பொருட்களை டெலிவரி செய்ய வேண்டும் என்ற கடடாயத்தில் உள்ளதால் அவர்கள் மிக கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். 10 மாடி ஏறிச் சென்று டெலிவரி செய்வது, சவாலான பகுதிகளுக்கு சென்று டெலிவரி செய்வது என பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக டெலிவரி ஊழியர்களை பிராங்க் செய்யும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெண் ஒருவர் டெலிவரி ஊழியரை பிராங் செய்யும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : இதுதான் அதிர்ஷ்டம்… உடைந்து நொறுங்கிய மின் கம்பம்.. நூலிழையில் தப்பிய சிறுவன் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது லொகேஷன் அருகே சென்றதும் உணவு ஆர்டர் செய்த பெண்ணுக்கு போன் செய்து எங்கு வர வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த பெண் நேராக வர வேண்டும் என கூறுகிறார். அப்போது தான் அந்த டெலிவரி ஊழியர் அது ஒரு கல்லறை என்பதை உணர்கிறார். இஸ்லாமிய கல்லறையில் இருந்து அந்த பெண் உணவு ஆர்டர் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : Viral Video : இறந்த திமிங்கலத்தின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்த இருவர்.. இணையத்தில் குவியும் கண்டனம்!

அந்த இடமும் சூழலும் அபாயகரமாக தோன்றிய நிலையில் அந்த உணவு டெலிவரி ஊழியர் உணவை டெலிவரி செய்யாமால் அங்கிருந்து சென்றுவிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..