Viral Video : பெண் பயணியின் மொபைல் போனை பிடுங்கிய ரயில்வே போலீஸ்.. வைரல் வீடியோ!
Police Snatch Phone From Female Passenger | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ரயில் பயணத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக காவலர் ஒருவர் பெண் பயணியின் செல்போனை பிடுங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
பேருந்தில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து ஸ்மார்ட்போன் பறிக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இங்கு பெண்ணின் ஸ்மார்ட்போனை பிடுங்குவதே ஒரு காவல்துறை அதிகாரிதான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெண் பயணியின் ஸ்மார்ட்போனை பிடுங்கிய போலீஸ் அதிகாரி
சமூக ஊடகத்தின் உதவியால் உலகம் முழுவதும் நடைபெறும் குற்ற சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். பல இடங்களில் பேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் ஸ்மார்ட்போன்களை திருடர்கள் பிடுங்கிச் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ரயிலில் பயணம் செய்யும் பெண்ணின் ஸ்மார்ட்போனை போலீஸ் அதிகாரி ஒருவர் பிடுங்கிச் செல்கிறார்.
இதையும் படிங்க : Viral Video : சீன பெருஞ்சுவரில் டுரோன் மூலம் டெலிவரி செய்யப்பட்ட உணவு.. வியக்க வைக்கும் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பெண் ஒருவர் ரயில் ஜன்னல் ஓரம் அமர்ந்துக்கொண்டு மொபைல் போனை பயன்படுத்துகிறார். அப்போது ரயிலின் வெளியே இருந்து போலீஸ் அதிகாரி ஒருவர் அவரிடம் இருந்து ஸ்மார்ட்போனை பிடுங்குகிறார். அதனை உணர்ந்த அந்த பெண் கூச்சலிடுகிறார். பிறகு ஸ்மார்ட்போனை பிடுங்கியது ஒரு போலீஸ் அதிகாரி என்பதை உணரும் அந்த பெண் சற்று அமைதியாகிறார். பிறகு அந்த போலீஸ் ஆதிகாரி அந்த பெண்ணுக்கு ரயிலில் பயணம் செய்யும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : நவராத்திரி கொண்டாட்டத்தில் உற்சாக நடனமாடிய டெலிவரி ஊழியர்கள்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், காவல் அதிகாரியை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.