Viral Video : Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சிய வரிக்குதிரை.. உணர்ச்சி பொங்கும் வீடியோ!
Zebra Mistaking Zookeeper for Mother | விலங்குகள் மனிதர்களுடன் மிகவும் உணர்வுடன் பழகும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், வரிக்குதிரை ஒன்று பாதுகாவளரை தனது தாய் என கொஞ்சும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
விலங்குகளும், மனிதர்களும் வெவ்வேறு உயிரினங்கள் தான். ஆனால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பந்தம் மிகவும் அழகானதாக இருக்கும். விலங்குகள் மனிதர்களுடன் நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டால் அவர்களுக்காக எதையும் செய்ய தயாராகிவிடும். அந்த வகையில் தொலைந்துப்போன வரிக்குதிரை ஒன்று வன விலங்கு காப்பகத்தில் விடப்பட்ட நிலையில், Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், அந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
Zookeeper-ஐ தனது தாய் என நினைத்து கொஞ்சிய வரிக்குதிரை
சென்னை, பெங்களுரூ உள்ளிட்ட பெரிய நகரங்களில் பொதுமக்களின் பார்வைக்காகவும், வன விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சில விலங்குகள் வன விலங்குகள் காப்பகத்தில் அடைக்கப்படும். அந்த வகையில், காட்டில் இருந்து வெளியே வந்த வரிக்குதிரை ஒன்றை மீட்டு வனத்துறை அதிகாரிகள் வன விலங்கு காப்பகத்தில் விட்டுள்ளனர். அந்த வரிகுதிரைக்கு தனது தாயின் நினைவு வரவே தனது பாதுகாவளரை தாய் என நினைத்து கொஞ்சி விளையாடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : கலர் பாம்கள் முதல் குதிரை ஊர்வலம் வரை.. லண்டனில் ஆசிய முறைப்படி நடைபெற்ற மாப்பிள்ளை ஊர்வலம்!
இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், வன உயிரியல் பூங்கா ஒன்றில் வரிக்குதிரை ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அதற்கு அருகில் அதன் காப்பாளர் நின்றுக்கொண்டு இருக்கிறார். காப்பாளர் தன்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதால் அந்த வரி குதிரை அவரையே தனது தாயாக நினைத்து அவருடன் கொஞ்சி விளையாடுகிறது. அந்த காப்பாளரும் ஒரு குழந்தையை தேற்றுவதை போல அந்த வரி குதிரையை தேற்றுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : நீர்வீழ்ச்சியாக மாறிய மேம்பாலம்.. கொட்டித் தீர்த்த மழைநீர்.. வைரல் வீடியோ!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அலவில்லாத அன்பும், அரவணைப்பும் இருந்தால் போதும். யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் தாயாகலாம் என்று பலரும் கருத்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.