Viral Video : கலர் பாம்கள் முதல் குதிரை ஊர்வலம் வரை.. லண்டனில் ஆசிய முறைப்படி நடைபெற்ற மாப்பிள்ளை ஊர்வலம்!

Asian Wedding Baraat Video | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் லண்டன் சாலையில் ஆசிய திருமண முறைப்படி குதிரை வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கலர் பாம்கள் முதல் குதிரை ஊர்வலம் வரை.. லண்டனில் ஆசிய முறைப்படி நடைபெற்ற மாப்பிள்ளை ஊர்வலம்!

வைரல் வீடியோ

Updated On: 

09 Sep 2025 22:03 PM

 IST

உலகம் முழுவதும் நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் மேளதாளங்கள் முழங்க, குதிரை ஊரவலத்துடன் லண்டனில் நடைபெற்ற ஆசிய திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அது குறித்து கலவையான விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

லண்டனில் மேளதாளங்கள் முழங்க குதிரை ஊரவலத்துடன் நடைபெற்ற திருமணம்

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் இருக்கும். இது உணவு, உடை, திருமணம் என அனைத்திலும் ஒன்றைவிட ஒன்று மாறுபட்டு இருக்கும். அந்த வகையில், இந்திய திருமணங்கள் கொண்டாட்டம் மிகுந்தவையாக இருக்கும். இதன் காரணமாக ஏராளமான  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்திய திருமணங்களை பார்க்க இந்தியாவுக்கு வருவார்கள். ஆனால், லண்டனில் ஆசிய முறைப்படி நடைபெற்ற திருமணத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : வேற வழியே இல்ல.. Traffic-ல் இருந்து தப்பிக்க ஸ்கூட்டரை தூக்கிச் சென்ற இருவர்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், லண்டன் சாலையில் குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம் நடக்கிறது. மாப்பிள்ளையின் குதிரை ஊர்வலத்தை பின் தொடர்ந்து விலை உயர்ந்த கார்கள் வருகின்றன. அந்த கார்களில் அமர்ந்திருக்கும் சிலர் வண்ண வண்ண புகைகளை வெளியிடுகின்றனர். அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழுங்க அந்த ஊர்வலம் நடைபெறுகிறது. அது லண்டனாக இருந்தாலும், அது ஆசிய திருமண ஊர்வலத்தை போல தான் தோன்றுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : விநாயகர் சதுர்த்தி: லண்டனில் விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள் – சர்ச்சையான வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இவர்கள் இப்படி செய்வதால் யார் மகிழ்ச்சி அடையப்போகிறார்கள் என்று ஒருவர் கூறியுள்ளார். இது இங்கிலாந்தா அல்லது ஆசிய நாடுகளில் ஒன்றா, குழப்பமாக உள்ளதே என்று ஒருவர் கூறியுள்ளார். சிலர் இந்த வீடியோவுக்கு விளையாட்டாக கருத்து பதிவிட்டு இருந்தாலும், சிலர் இந்த வீடியோவை கண்டித்தும் கருத்து பகிர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.