Viral Video : போர் அடிக்குது, வேளைய விடப்போறேன்.. ஜென்சி இளைஞர் போட்ட வீடியோ வைரல்!
Gen Z Young Man Video Goes Viral | ஜென்சி தலைமுறையினர் செய்யும் செயல்கள் மற்றும் அவர்களது கருத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில் ஜென்சி இளைஞர் தான் வேலையை விட போவதாக கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ஜென்சி தலைமுறையை (Gen Z Generation) சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் வேலையை விடுவதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் தான் வேலையை விடுவதற்காக அதில் கூறியுள்ள காரணம் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
போர் அடிக்குது, வேலைய விடபோறேன் – ஜென்சி இளைஞர் வீடியோ பதிவு
ஜென்சி தலைமுறையினர் மிகவும் வித்தியாசமானவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களுக்கென தனி கொள்கைகளை கொண்டுள்ளனர். உதாரணமாக எதையும் பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, அதிகமாக கோபப்படுவது உள்ளிட்டவற்றை செய்கின்றனர். இவ்வாறு ஜென்சி தலைமுறையினர் செய்யும் செயல்கள் அவ்வப்போது பேசுபொருளாக மாறுகிறது. இந்த நிலையில், ஜென்சி இளைஞர் ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : மேகாலயாவில் குலத்தை சுத்தம் செய்த போர்ச்சுகல் சுற்றுலா பயணி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள அந்த இளைஞர், நாளை நான் எனது வேளையை விடப்போகிறேன். நான் என்ன செய்ய போகிறேன் எனக்கு தெரியவில்லை. எனக்கு 22 வயது ஆகிறது. நான் பெங்களூரில் வசிக்கிறேன். நான் செய்யும் வேலையை நான் வெறுக்கிறேன். தற்போதைய எனது வாழ்க்கை சூழலை நான் வெறுக்கிறேன். இன்று நவம்பர் 30, 2025. டிசம்பர் 1, 2025 நான் வேலையை விடப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Viral Video :மகளின் சங்கீத்தில் தந்தை கூல் டான்ஸ்.. வைரல் வீடியோ!
நான் முழு நேர வேலை செய்கிறேன், அதனை முழுமையாக வெறுக்கிறேன். அது எனக்கு போரிங்காக உள்ளது. நான் எனது நேரத்தை வீணப்படிதாக நினைக்கிறேன். அதனால் நான் ஆஸ்திரேலியாவில் மேற்படிப்புக்காக விண்ணப்பித்துள்ளேன். இரண்டு பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ளேன். ஆனால் நான் மீண்டும் படிக்கவோ, வேலை செய்யவோ விரும்பவில்லை. நான் கடுமையான குழப்பத்தில் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.