Viral Video : போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற இளைஞர்.. பகீர் வீடியோ!

Traffic Police Dragged In Bonnet of Mercedes Benz Car | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் போக்குவரத்து காவலர் ஒருவர் காரின் பானட்டில் இழுத்துச் செல்லப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற இளைஞர்.. பகீர் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

02 Mar 2026 19:39 PM

 IST

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் முக்கிய மற்றும் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அதேபோல, குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளைஞர் ஒருவர் போக்குவரத்து காவலரை காரின் பானட்டில் இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது, இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச் சென்ற இளைஞர்

தெலங்கானா மாநிலம்,  ஹைதராபாத்தில் உள்ள காச்சிபௌலி பகுதியில் போக்குவரத்து காவலர் ஒருவர் மெர்சிடிஸ் பென்ஸ் காரில், இளைஞர் ஒருவரால் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 24 வயது இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அதிகமாக குடித்துவிட்டு காரை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் நானக்ராம்குடா பகுதியில் சென்றுக்கொண்டு இருந்த ஒரு காரின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : குதிரையில் பிளிங்கிட் டெலிவரி செய்யும் முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதனை தொடர்ந்து அவர் ஒரு இரு சக்கர வாகனத்தையும் இடித்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தயார் நிலையில் இருந்த போக்குவரத்து காவலர்கள் ஐஐடி இணைப்பில் அந்த காரை நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், அந்த நபர் காரை பிரேக் போட்டு நிறுத்தாமல் வேகமாக இயக்கியதால் அந்த காவலார் காரின் பானட் மீதி விழுந்துள்ளார். அதனை கண்டுக்கொள்ளாத இளைஞர் போக்குவரத்து காவலரை சுமார் 800 மீட்டர்கள் தூரம் வரை இழுத்துச் சென்றுள்ளார்.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அந்த இளைஞரை மடக்கி பிடித்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 14 நாட்கள் சிறை காவலில் அடைத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இளைஞரின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
இஸ்ரேலில் முதன்முறையாக F-22 போர் விமானங்களை களமிறக்கிய அமெரிக்கா
பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் கிடையாது - டிஜிசிஏ அறிவிப்பு
சாலை விபத்துகளை குறைக்க புதிய ஓட்டுநர் உரிமம் - நிதின் கட்கரி அறிவிப்பு
பழைய ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்த பெண் - வைரலாகும் வீடியோ