பிஎஃப் திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் டாப் 4 தனியார் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
High Interest Rate FD Schemes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள சில தனியார் வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன.

பொதுமக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தங்களின் எதிர்கால தேவைகளுக்காக சேமிக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். அவ்வாறு சேமிக்கவில்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சவால்களை சந்திக்க முடியாத நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், பொதுமக்கள் சேமிப்பதற்காக செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்பு நிதி திட்டம் (FD – Fixed Deposit Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நிதி பாதுகாப்புடன் கூடிய நல்ல பலன்களை பெற முடியும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் இந்த நிலையான வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி பொது குடிமக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
ஐசிஐசிஐ வங்கி
2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஐசிஐசிஐ வங்கி 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : RD : தினமும் ரூ.340 முதலீடு செய்து ரூ.17 லட்சம் சேமிக்கலாம்.. எப்படி தெரியுமா?
கோடக் மஹிந்திரா வங்கி
444 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி 6.6 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஃபெடரல் வங்கி
444 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு ஃபெடரல் வங்கி 6.7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.2 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
2 முதல் 3 ஆண்டுகள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.45 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் கூடுதலாக வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : EPFO : ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் நிறுவனங்கள் எப்படி பங்களிக்கின்றன? விவரம் இதோ!
பேங்க் ஆஃப் பரோடா
444 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதுவே இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதம் கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது.