Viral Video : இந்திய நகரங்களில் பாதுகாப்பு.. மதிப்பெண் வழங்கிய ரஷ்ய பெண்.. வைரல் வீடியோ!

Russian Woman Gave Rating For Indian Cities For Safety | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்தியா வந்த ரஷ்ய பெண் ஒருவர், இந்திய நகரங்களின் பாதுகாப்பு குறித்து பதிவிட்டுள்ள வீடியோம் வைரலாகி வருகிறது.

Viral Video : இந்திய நகரங்களில் பாதுகாப்பு.. மதிப்பெண் வழங்கிய ரஷ்ய பெண்.. வைரல் வீடியோ!

இணையத்தில்வைரலாகும் வீடியோ

Updated On: 

19 Apr 2026 21:12 PM

 IST

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் தங்களது அனுபவம் குறித்த வீடியோக்களை பதிவு செய்வர். அந்த வகையில், ரஷ்ய பெண் ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நிலையில், இந்திய நகரங்களில் தான் எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்ந்தேன் என்பது குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய நகரங்களில் பாதுகாப்பு – ரஷ்ய பெண் வெளியிட்ட வீடியோ

இந்திய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொள்ளும் வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சிலர் தனியாக சுற்றுலா வரும் நிலையில், சிலர் குழுவாக வருவர். அவ்வாறு தனியாக சுற்றுலா வரும் நபர்கள் தங்களது அனுபவத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வீடியோ பதிவு செய்து அதனை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிடுவர். அந்த வகையில், ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த பெண் வெளியிட்ட வீடியோ தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : இருசக்கர வாகனத்தில் சென்ற இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. வைரல் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், அந்த இளம் பெண் இந்திய நகரங்களை பாதுகாப்பு அடிப்படையில் மதிப்பு வழங்குகிறார். அதில் ஜெய்ப்பூருக்கு 8, மணாலிக்கு 9, ஜோத்பூருக்கு 7, கோவாவுக்கு 8, டெல்லிக்கு 2, ரிஷிகேஷுக்கு 9, ஆக்ராவுக்கு 3 என 10-க்கு அவர் மதிப்பெண்களை வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : பெங்களூரில் Zombie Drug?.. அசையால் நின்ற நபரால் சர்ச்சை.. விளக்கம் அளித்த பெங்களூரு போலீஸ்!

ரஷ்ய இளம் பெண்ணின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அவரது கருத்துக்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..