Viral Video : மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியரான முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Old Man Working As A Delivery Agent | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், முதியவர் ஒருவர் தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியராக பணியாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

Viral Video : மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியரான முதியவர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

15 Mar 2026 20:08 PM

 IST

சமூக ஊடகங்களின் உதவியால் சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்கள் இணையத்தில் பொதுமக்கள் மத்தில் விரைவாக கவனத்தையும் பெறும். அந்த வகையில், முதியவர் ஒருவர் தனது மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக டெலிவரி ஊழியராக பணியாற்றுவது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மனைவியின் மருத்துவ செலவுக்காக டெலிவரி ஊழியரான முதியவர்

இந்த உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு முக்கிய காரணம் என்றால் அது காதல் தான். காதலால் தான் இந்த பூமி மிகவும் அழகானதாக இருக்கிறது. காதல், தான் நேசிக்கும் மனிதருக்காக எதையும் செய்ய துணியும். அப்படி ஒரு காதல் கதை தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, முதியவர் ஒருவர் தனது மனைவிக்கு மருந்து வாங்க டெலிவரி ஊழியராக பணியாற்றும் வீடியோ தான் அது.

இதையும் படிங்க : Viral Video : குழந்தையை கையில் வாங்க உணர்ச்சிவசப்பட்ட தந்தை.. இணையத்தில் வைரலாகும் அழகிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் ஒரு வீட்டில் முதியர் ஒருவர் ஏதோ ஒரு பொருளை டெலிவரி செய்கிறார். அது அந்த வீட்டின் கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ பதிவிடப்பபட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், தனது மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக டெலிவரி வேலை செய்யும் முதியவருக்கு இணையத்தில் 2,80,000 டாலர்கள் நிதி கிடைத்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயில் படியில் தொங்கியபடி ரீல்ஸ் எடுத்த இளைஞர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் நிலையில்,  முதியவரின் காதல் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
100 ஆண்டுகளுக்கு முன் பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கிய கடனை திருப்பி கேட்கும் இந்திய குடும்பம்
பிறந்த குழந்தையை கையில் வாங்கும்போது உணர்ச்சிவசப்பட்ட தந்தை - வைரலாகும் வீடியோ
காமிகாஸ் டிரோன் படகுகளை பயன்படுத்தி எண்ணெய் கப்பல்களை தாக்கும் ஈரான்
பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்ததால் சரச்சை - சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் பக்கம் முடக்கம்