Viral Video : புதினின் செய்தியாளர் சந்திப்பில் காதலிக்கு புரொபோஸ் செய்த நபர்.. வைரல் வீடியோ!
Man Proposed His Girlfriend For Marriage | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது காதலிக்கு புரொபோஸ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சில அசாத்தியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வகையில், ரஷ்ய அதிபர் புதினின் (Russia President Putin) செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் தனது காதலிக்கு திருமண புரொபோசல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதினின் செய்தியாளர் சந்திப்பில் காதலிக்கு புரொபோஸ் செய்த செய்தியாளர்
காதலர்கள் தங்கள் காதலிகளுக்கு புரொபோஸ் செய்ய மிகவும் வித்தியாசமான முறைகளை தேர்வு செய்வர். பிடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று புரொபோஸ் செய்வது, பிடித்த பொருட்களை வாங்கி கொடுத்து புரொபோஸ் செய்வது என மிகவும் வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் தங்களது வாழ்நாளின் முக்கிய நாளை வடிவமைப்பர். அந்த வகையில், புதினின் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் தனது காதலிக்கு புரொபோஸ் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : நீச்சல் அடித்துக்கொண்டு மொபைல் பயன்படுத்தும் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
‘Olga, will you marry me?’ — local TV journalist proposes during the live Putin Q&A
‘Mr President, we would be so glad to see you at our wedding’
‘You can wait forever, so best not to postpone’ — Putin pic.twitter.com/0H2bwZe7RH
— RT (@RT_com) December 19, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபடுகிறார். அதில் செய்தியாளர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது ஒரு செய்தியாளர் எழுந்து நின்று தனது காதலிக்கு திருமண புரொபோஸ் செய்கிறார். ஓல்கா என்னை திருமணம் செய்துக்கொள்வாயா என்று அவர் கேட்கிறார். அதுமட்டுமன்றி, தங்களது திருமணத்திற்கு வரவேண்டும் என புதினிடம் அவர் கேட்கிறார். அதற்கு நீங்கள் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்துக்கொண்டு இருங்கள். ஆனால், விரைவாக குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.