Viral Video : கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் காவலாளி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
Man Guarding Apartment By Wearing Mosquito Net | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், காவலாளி ஒருவர் கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ
சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றில் நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் அசாத்திய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் மிக விரைவாக வைரலாகும். அந்த வகையில், காவலாளி ஒருவர் கொசு வலை போட்டுக்கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொசு வலை போட்டுக்கொண்டு காவல் காக்கும் காவலாளி
இணையத்தில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வரும். சுவாரஸ்ய சம்பங்கள் மட்டுமன்றி, ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வைரலாகி வரும். அந்த வகையில் தான், ஹைதராபாத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி ஒருவர் தன் மீது கொசு வலையை போட்டுக்கொண்டு காவல் காக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : பெங்களூரில் Zombie Drug?.. அசையால் நின்ற நபரால் சர்ச்சை.. விளக்கம் அளித்த பெங்களூரு போலீஸ்!
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ
“Security guard life in India.” 💔
Poor guard is covered under a mosquito
net and doing his duty while awake at night. Society members live in AC; cannot they provide a safe place for their guard?The real issue is compassion. People have lost their compassion for the poor. pic.twitter.com/aqIweshHeR
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) April 16, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் ஒன்றில் காவலாளி ஒருவர் அமர்ந்துக்கொண்டு இருக்கிறார். அவர் கொசுக்கடியில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, தன் மீதி கொசு வலை போட்டுக்கொண்டு இருக்கிறார். அதனை பெண் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க : Viral Video : 30 நொடிகளில் பலரை கடித்து குதறிய நாய்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ!
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அவருக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என கூறி கருத்து பகிர்ந்து வருகின்றனர்.