Viral Video : சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்.. உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்!

Man Doing Stunts By Opening Doors Of Running Vehicles | டெல்லி சாலைகளில் செல்லும் வாகனங்களின் கதவுகளை திறந்து விட்ட இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், அந்த இளைஞரை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Viral Video : சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்.. உடனடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்!

வைரல் வீடியோ

Published: 

18 Feb 2026 13:04 PM

 IST

டெல்லி, பிப்ரவரி 18 : ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் சுவாரஸ்யமான மற்றும் நகைச்சுவை சம்பவங்கள் தொடர்பாக வீடியோக்கள் மட்டுமன்றி, குற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வைரலாகும். அத்தகைய வீடியோக்கள் வைரலாகும் பட்சத்தில் அது குறித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும். அந்த வகையில் டெல்லியில் சாலையில் செல்லும் வாகனங்களின் கதவுகளை திறந்துவிட்டு அட்டகாசம் செய்து வந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாலையில் செல்லும் வாகனங்களில் கதவுகளை திறந்துவிட்ட இளைஞர்

இந்திய சாலைகளில் வாகனம் ஓட்ட வேண்டும் என்பதற்காக சில கடுமையான விதிகள் உள்ளன. சிலர் இந்த விதிகளை முறையாக பின்பற்றினாலும், பலர் அவற்றை குறித்து கருத்தில் கொள்வதே இல்லை. குறிப்பாக இளைய சமூதாயத்தினர் சாலை விதிகளை மீறும் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, ஸ்டண்ட் செயவ்து போன்ற செயல்களை செய்கின்றனர். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் சாலையில் சென்ற வாகனங்களிடம் அட்டாகாசம் செய்த இளைஞரின் வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : திடீரென இடிந்து உள்ளே வாங்கிய ஷாங்காய் சாலை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இருசக்கர வாகனத்தில் செல்லும் அந்த இளைஞர், சாலையில் செல்லும் வாகனங்களின் கதவுகளை திறந்து விடுகிறார். இவ்வாறு பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் கதவுகளை திறந்து விடுவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இளைஞரின் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், அது டெல்லி காவல்துறையின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பெங்களூரு தம்பதியின் திருமண நாளுக்கு பணிப்பெண் அளித்த அன்பு பரிசு.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வீடியோக்களை ஆதாரமாக வைத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது தொடர்பாக டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வரும் நிலையில், பொதுமக்கள் அதற்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Follow Us
கோஸ்ட் டெலிவரி மோசடி: LPG சிலிண்டர் புக்கிங்கில் புதிய சிக்கல்..
கும்பமேளா வைரல் மோனாலிசா போஸ்லே காணவில்லை .. ஃபர்மான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..
ஆண்ட்டி என அழைத்ததால் மன உளைச்சல் - நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு
சாலையில் குட்காவை துப்பிய இந்திய சுற்றுலா பயணிகள் - சுத்தம் செய்ய வைத்த நேபாளி