Viral Video : பாத்திரத்தில் சிறுநீர் கழித்த பணிப்பெண்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

Maid Urinates in Utensils | உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் பணிப்பெண் ஒருவர் தான் பணி செய்யும் வீட்டில் உள்ள பாத்திரத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பாத்திரத்தில் சிறுநீர் கழித்த பணிப்பெண்.. இணையத்தில் வைரலாகும் ஷாக் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

23 Aug 2025 23:30 PM

உத்தர பிரதேசத்தில் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர், பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் பாதுகாப்பு கருதி பெரும்பாலான வீடுகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த நிலையில், அந்த பணிப்பெண் வேலை செய்த வீட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருந்த நிலையில், அவரின் இந்த கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாத்திரத்தில் சிறுநீர் கழித்த பணிப்பெண்

சமூக ஊடகங்களில் உதவியால் உலகில் எந்த மூலையில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றாலும் அது மிக எளிதாக உலகிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில், உத்தர பிரதேசத்தில் பணிப்பெண் ஒருவர் தான் பணிபுரியும் வீட்டில் இருக்கும் பாத்திரங்களில் சிறுநீர் கழித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வேலை பலுவின் காரணமாக பொதுமக்கள் தங்களது தேவைகளுக்காக பணிப்பெண்களை பணியமர்த்தும் நிலையில், அந்த பெண்ணின் செயல் கடும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க : லாரி கவிழ்ந்து விபத்து…. ஆபத்தை உணராமல் டீசலை கேன்களில் அள்ளி செல்லும் மக்கள் – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் பணிப்பெண்ணின் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த  வீடியோவில் பெண் ஒருவர் ஒரு வீட்டில் சமையல் அறைக்குள் செல்கிறார். அப்போது யாரேனும் வருகிறார்களா என்பதை கவனிக்கும் அந்த பெண், ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் சிறுநீர் கழிக்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : டெலிவரிக்கு சென்ற வீட்டில் மழையில் நனைந்த துணிகள்.. எடுத்து மடித்து வைத்த போஸ்ட்மேன்!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தங்களது வேலை பலுவின் காரணமாக ஒருவரை பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தும் சூழலில் அந்த நபர் இத்தகைய செயலை செய்வது நம்பிகை துரோகம் என்றும் அந்த பெண் செய்த கொடூர செயலுக்கு அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.