Viral Video : சோயா பீன்ஸ் உருளை இடிந்து விழுந்து விபத்து.. நொடி பொழுதில் உயிர் தப்பிய ஊழியர்கள்!
Giant Soybean Silo Collapse in US | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகு. இந்த நிலையில் ராட்சத சோயா பீன்ஸ் உருளை இடிந்து விழும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையாக வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வீடியோக்களில் சில அதிர்ச்சியூட்டும் வகையிலும், சில ஆச்சர்யமூட்டும் வகையிலும் இருக்கும். அந்த வகையில், சோயா பீன்ஸ் நிறப்பட்ட ராட்சத உருளை ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ராட்சத சோயா பீன்ஸ் உருளை இடிந்து விழுந்து விபத்து
அமெரிக்காவில் உள்ள ஒரு உற்பத்தில் ஆலையில் ஊழியர்கள் சிலர் இணைந்து ஒரு ராட்சத உருளையில் 30,000 செடிகளில் இருந்து அறுவடை செய்யப்பட்ட சோயா பீன்ஸ்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திடீரென சோயா பீன்ஸ் அடைத்து வைக்கப்பட்டிருந்த உருளை உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் அங்கு பணி செய்துக்கொண்டு இருந்த யாருக்கும் எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என அமெரிக்க உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : Viral Video : சிறுவனுக்கு புதிய சைக்கிள் பரிசளித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி.. குவியும் பாராட்டு!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A grain bin filled with soybeans collapsed in Iroquois County, Illinois, taking out power lines but causing no injuries. pic.twitter.com/LkztoqI5r9
— USA TODAY Video (@usatodayvideo) October 16, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஊழியர்கள் சிலர் மூன்று பெரிய ராட்சத உருளைகளில் சோயா பீன்ஸ்களை ஏற்றுகின்றனர். அப்போது திடீரென ஒரு உருளை முற்றிலுமா உடைகிறது. அதனை கண்டு அங்கிருக்கும் ஊழியர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். ஒருசில நிமிடங்களில் அந்த இடம் புகை மூட்டமாக மாறுகிறது. உருளை இடிந்ததும் ஊழியர்கள் அங்கிருந்து ஓடிவிட்டதால் யாருக்கும் பெரிதாக ஆபத்து எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Viral Video : போலந்தை இந்தியாவுடன் ஒப்பிட்டு வீடியோ வெளியிட்ட இந்திய இளைஞர்.. இணையத்தில் வைரல்!
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், யாருக்கும் எந்த வித ஆபத்தும் ஏற்படாதது குறித்து பலரும் மகிழ்ச்சியுடன் தங்களது கருத்துக்களை வீடியோவில் பகிர்ந்து வருகின்றனர். நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிலர் கருத்து பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.