Viral Video : திடீரென இடிந்து உள்ளே வாங்கிய ஷாங்காய் சாலை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!

Giant Sinkhole Swallows Shanghai Road | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், சீனாவின் ஷாங்காய் சாலையில் ஏற்பட்ட பெரிய பள்ளம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி இணைய வாசிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : திடீரென இடிந்து உள்ளே வாங்கிய ஷாங்காய் சாலை.. அதிர்ச்சியூட்டும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

13 Feb 2026 17:00 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் நடைபெறும் முக்கியமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் வியப்பூட்டும் வகையிலும், சில அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். அந்த வகையில், சீனாவின் சாலை இடிந்து உள்ளே வாங்கியது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இணையத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

திடீரென இடிந்து உள்ளே வாங்கிய சாலை

பிப்ரவரி 12, 2026 அன்று சீனாவின் ஷாங்காய் பகுதியில் உள்ள மிகப்பெரிய சாலை ஒன்று திடீரென இடிந்து உள்ளே வாங்க தொடங்கியுள்ளது. இதனை கண்டு அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த பகுதியில் மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த வித உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான், இந்த பயங்கர விபத்து குறித்த வீடியோ இணையத்தில் பெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பட்டர் சிக்கன் ஷூவை அறிமுகம் செய்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர்.. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஷாங்காயில் உள்ள பெரிய சாலை ஒன்று திடீரென இடிந்து உள்ளே வாங்க தொடங்குகிறது. அங்கிருக்கும் வாகனங்கள், கண்டெய்னர்கள் உள்ளிட்டவை குழிக்குள் விழுகின்றன. அதனை கண்டு அங்கிருக்கும் பொதுமக்கள் ஓடுகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : குப்பை போட போர்ட்டர் புக் செய்த இளம் பெண்.. இணையத்தை கோபமடைய செய்த வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்தால் இயற்கை பேரழிவை போல அதிர்ச்சியூட்டும் வகையில் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரை விட மோசமாக நடத்திய அமெரிக்கா - பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்
‘கோச்சடையான்’ தயாரிப்பாளருக்கு ரூ.2.52 கோடி அபராதம்.. செலுத்தாவிட்டால் 6 மாதம் சிறை.. உயர்நீதிமன்றம்
சத்தமில்லாமல் இந்திய - அமெரிக்க வரத்தக ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்த அமெரிக்கா
மலையாள சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ‘ரோஸ்லின்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..