லாரி கவிழ்ந்து விபத்து…. ஆபத்தை உணராமல் டீசலை கேன்களில் அள்ளி செல்லும் மக்கள் – வைரலாகும் வீடியோ

Viral Video : உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் டீசல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் தங்களிடம் உள்ள கேன்கள் மற்றும் வாளிகள் கொண்டு வந்து ஆபத்தை உணராமல் டீசலை அள்ளி சென்றனர்.

லாரி கவிழ்ந்து விபத்து.... ஆபத்தை உணராமல் டீசலை கேன்களில் அள்ளி செல்லும் மக்கள் - வைரலாகும் வீடியோ

டீசலை அள்ளிச் செல்லும் மக்கள்

Published: 

20 Aug 2025 21:59 PM

சமீப காலமாக உணவுப் பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானால், சாலைகளில் சிதறிக் கிடக்கும் பொருட்களை மக்கள் எடுத்து செல்லும் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகி வருகின்றன. சில இடங்களில் மதுபானம் ஏற்றிச்செல்லும் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானால் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றாமல், மதுபான பாட்டில்களை எடுத்து செல்லும் வீடியோக்களையும் நாம் பார்த்திருப்போம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் (Uttar Pradesh) ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கிறது. சமீபத்தில் ஒரு டீசல் லாரி கவிழ்ந்த நிலையில் மக்கள் அனைவரும் கேன்களில் டீசல் அள்ளி செல்லும் வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சோன்பத்ராவில் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கேன்கள் வாளிகள் ஆகிவயவற்றோடு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் காயமடைந்த டிரைவர்களுக்கு யாரும் உதவிக்கு கூட வரவில்லை. அவர்களை ஓரமாக வைத்துவிட்டு டீசலை எடுக்க சென்றனர்.

இதையும் படிக்க : பள்ளிக்கு குதிரையில் செல்லும் சிறுவன்.. வியக்கவைக்கும் சுவாரஸ்ய வீடியோ!

வைரலாகும் வீடியோ

 

டீசலை கேன்களில் சேகரித்த மக்கள்

இந்த விபத்தில் லாரியில் இருந்து 20 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமான டீசல் சாலையில் கொட்டியது. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு மக்கள் போலீஸ் வந்து சேருவதற்குள், அப்பகுதியில் உள்ள மக்கள் டீசலை சேகரிக்க வந்தனர். சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும விஷயத்தை கேள்விப்பட்டு அப்பகுதிக்கு வந்தனர். தங்களிடம் இருக்கும் கேன்கள் மற்றும் வாளி ஆகியவற்றில் அள்ளி சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதனையடுத்து நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகன்றனர். டீசல் மிகவும் ஆபத்தானது. திடீரென தீ பட்டால் அந்த இடமே எரிந்து சாம்பலாகிவிடும் எனது கவலையை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிக்க : மதுபோதையில் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர் – வைரலாகும் வீடியோ

ஒரு சில லிட்டர் டீசலுக்காக யாராவது தங்கள் உயிரைப் பணயம் வைப்பார்களா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர்கள் கோருகின்றனர். அந்த இடத்தில் சிறிய தீ கங்கு பட்டால் கூட பெரும் விபத்து ஏற்படும். மக்கள் ஆபத்தை உணராமல் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். சில ரூபாய் மதிப்புள்ள டீசலுக்காக, விலை மதிப்பற்ற உயிரை பணயம் வைக்கக் கூடாது என மக்கள் எச்சரித்து வருகின்றனர்.