Viral Video : கேதார்நாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு!

Chaos Created In Kedarnath Temple | சமூக ஊடகங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கேதார்நாத் கோயிலில் பக்தர்கள் முந்தி அடித்துக்கொண்டு செல்ல முயன்ற போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Viral Video : கேதார்நாத் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.. கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

24 Apr 2026 21:32 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் நம்மை சுற்றி நடைபெறும் சில முக்கிய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இதில் சில குற்ற மற்றும் கண்டிக்கத்தக்க சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், கேதார்நாத் கோயிலில் ஏராளமான பக்தர்கள் முந்தி அடித்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்ய முயன்ற சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கேதார்நாத் கோயிலில் முந்தி அடித்துக்கொண்டு சென்ற பக்தர்கள்

உத்தரகாண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டம், மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தான் இந்த கேதார்நாத் கோயில். இந்த கோயில் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றதாக உள்ளது. இதன் காரணமாக இங்கு ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அங்கு சார் தாம் யாத்ரா தொடங்க உள்ள நிலையில், அங்கு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : Viral Video : மும்பை ஆட்டோவில் டெய்லர் ஸ்விஃப்ட், ஜஸ்டின் பைபர் பாடல்கள்.. இணையத்தை கலக்குக் ஆட்டோ ஓட்டுநர்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில், கேதார்நாத் கோயிலுக்கு வெயிலே வரிசையில் ஏராளமான பக்தர்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். இரண்டு பக்கமும் இரம்பு தடுப்புகள் அமைக்கப்பட்ட நீண்ட வரிசையில் அவர்கள் நின்றுக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில், தடுப்புக்கு வெளியே இருக்கும் சிலர் திடீரென தடுப்புகள் உள்ள வரிசைக்கு வர உள்ளே குதிக்கின்றனர். ஏற்கனவே கூட்ட நெரிசலாக இருக்கும் அந்த வரிசை மேலும் கூட்ட நெரிசல் மிகுந்ததாக மாறுகிறது. இதனால் பக்தர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பாராகிளைடிங்கில் இப்படி ஒரு ஆபத்தா?.. பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Follow Us
சீனாவிலிருந்து ஈரானுக்கு சென்ற கப்பல் பறிமுதல்: ஏவுகணை இரசாயனங்கள் குறித்த அதிர்ச்சி குற்றச்சாட்டு!
படத்தை மிஞ்சும் நிஜ சம்பவம்.. நோயாளிக்கு சிகிச்சை அளித்த பாதுகாப்பு காவலர்..
ஹைதராபாத் குறித்து பெண் பகிர்ந்த அனுபவம்.. இணையத்தில் வைரல்.
ஹைதராபாதில் வினோத சம்பவம்.. காக்கை விலைக்கு வாங்கிய நிகழ்வு..