Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நெடுஞ்சாலையில் சென்ற கார்.. திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல்.. அதிர்ச்சி வீடியோ!

Car Driver escaped from robbery in highway | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு விதமான வித்தியாசமான வீடியோ வெளியாகி வைரலாகும். அந்த வகையில் நெடுஞ்சாலையில் சென்ற காரை வழிமறித்து சிலர் வழிப்பறி செய்ய முயற்சி செய்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : நெடுஞ்சாலையில் சென்ற கார்.. திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல்.. அதிர்ச்சி வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Published: 20 May 2025 22:08 PM

இரவு எவ்வளவு அழகானதோ அதில் அவ்வளவு ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. பொதுவாக இரவு நேரம் அமைதியாக, ஆள் நடமாட்டம் இல்லாததாக இருக்கும். பலர் இந்த அமைதியான சூழலை விரும்புவர். ஆனால், சிலர் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள். அந்த வகையில், இரவில் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நபருக்கு மிகவும் அதிர்ச்சியூட்டும், அபாயகரமான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறி செய்ய காத்திருந்த கொள்ளையர்கள்

ஆள் நடமாட்டம் இல்லாத மற்றும்  இருள் சூழந்த இடங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில், பங்களாதேஷில் அதிர்ச்சியூட்டும் கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஒருவர் நெடுஞ்சாலையில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், அங்கு வழிப்பறி செய்வதற்காக கொள்ளை கும்பல் காத்திருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர்களது கையில் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்த நிலையில், புத்திசாலிதனமாக யோசித்த அந்த நபர் காரை பின்புறமாக இயக்கி தப்பித்துள்ளார்.

இணையத்தில் வைரலாகி வரும் கொள்ளை முயற்சியின் பரபரப்பு சிசிடிவி காட்சி

Dashcam Captures Failed Robbery Attempt in Bangladesh as Quick-Thinking Driver Escapes Ambush
byu/Siyam_07 innextfuckinglevel

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒருவர் காரில் இருள் மிகுந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்கிறார். அப்போது கார் ஒரு பாலத்திற்கு அருகே சென்ற போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் சிலர் புதர்களுக்குள் இருந்து வெளியே வருகின்றனர். அவர்கள் அந்த காரை நோக்கி கத்தி மற்றும் அறிவாள்களை எடுத்துக்கொண்டு ஓடி வருகின்றனர். இதனை பார்த்த அந்த நபர் காரை பின்னால் இயக்கி அங்கிருந்து செல்கிறார். இவை அனைத்தும் அந்த காரில் பொருத்தி வைக்கப்பட்டு இருந்த டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இருள் மிகுந்த அந்த சாலையில் மிருகங்கள் கூட அச்சுறுத்தவில்லை. ஆனால், இந்த மனிதர்கள் மிகவும் கொடூரமானவர்களாக உள்ளனர் என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், இந்த வீடியோ பார்ப்பதற்கே மிகவும் அதிர்ச்சியாகவும், பயமாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி
ராஜஸ்தான் அபார வெற்றி - தல தோனியிடம் ஆசிபெற்ற வைபவ் சூர்யவன்ஷி...
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!
ஹீமோகுளோபினை அதிகரிக்க எடுத்துக்கொள்ள வேண்டிய இயற்கை உணவுகள்!...
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்னைகள்!...
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!
செம்பு பாத்திரத்தில் பால் குடித்தால் ஏற்படும் பிரச்னைகள்!...
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!
பாரிஸ் மெட்ரோவில் இந்திய பாரம்பரிய உடையில் கலக்கிய பெண்!...
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!
நெடுஞ்சாலையில் காரில் சென்றவருக்கு நடந்த பயங்கரம் - வைரல் வீடியோ!...
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்
அலாரத்தை ஸ்நூஸ் செய்து தூங்குறீங்களா? மூளையை கடுமையாக பாதிக்கும்...
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!
ஐபிஎல்லில் தொல்லை தரும் மழை.. புதிய விதியை அமல்படுத்திய பிசிசிஐ!...
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?
15 நிமிடத்தில் இந்திய ரயில்வே மட்டன் கறி செய்வது எப்படி..?...
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?
ஃபார்ம் 16 இல்லையா? வருமான வரி தாக்கல் செய்வது எப்படி?...
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!
சிவகங்கை கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்!...