Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : இப்படியெல்லாம் கூடவா வீடு கட்டுறாங்க?.. இணையத்தை குழப்பமடைய செய்த வீடியோ!

Bihar's Thinnest House | உலகில் பல வகையில் வித்தியாசமான தோற்றங்களுடன் வீடுகள் கட்டப்படுகின்றன. அந்த வகையில் பீகாரில் மிகவும் குறுகிய அகலம் கொண்ட வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த வீட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Viral Video : இப்படியெல்லாம் கூடவா வீடு கட்டுறாங்க?.. இணையத்தை குழப்பமடைய செய்த வீடியோ!
வைரல் வீடியோ
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 04 Jul 2025 19:15 PM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான செயல்கள், சம்பவங்கள், விலங்குகள் என பல வகையான விஷயங்கள் வைரலாகும். அந்த வகையில், தற்போது மிகவும் சிறிய அளவில் கட்டப்பட்ட வீடு ஒன்றின் வீடியோ வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. ஒருவர் கூட நிற்க முடியாத அளாவு அந்த வீடு கட்டப்பட்டுள்ள நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் அப்படி என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மிக சிறிய அளவில் கட்டப்பட்ட வீடு

சொந்த வீடு கட்ட வேண்டும் அல்லது வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள் கனவாக இருக்கும். பெரியதாக இல்லை என்றால் சிறியதாகவாது ஒரு வீடு கட்ட வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். இந்த நிலையில், பீகாரில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அந்த வீடு மிக குறுகிய அகலத்தை கொண்டுள்ளது. வீடு என்றால் கை, காள்களை நீட்டி படுக்கும் வகையிலாவது இருக்க வேண்டும். ஆனால், இந்த வீட்டில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என தோன்றுகிறது. இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த வீடு மற்ற வீடுகளை விட மிகவும் சிறிய தோற்றத்தை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது ஒரு வீடு போல் அல்லாமல் ஒரு சுற்று சுவர் போல தான் உள்ளது. ஆனால், ஒரு வீட்டில் எவ்வாறு ஜன்னல்கள் வைத்து கட்டப்படுமோ அதேபோல அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனை பார்க்கும்போது சீன பெருஞ்சுவர் போல உள்ளது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். வீட்டின் முன் பகுதி மட்டும் உள்ளது, மீதமுள்ள பகுதிகள் எங்கே என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு பலரும் கிண்டலாக அந்த வீடு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.