Viral Video : காரணமே இல்லாமல் பைக்கில் சென்ற இளைஞரை தாக்கிய காவலர்கள்.. ஷாக் வீடியோ!

Bihar Police Brutally Attacked Young Man | காவல்துறையினர் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளைஞர் ஒருவர் பீகார் போலீசார் காரணமே இல்லாமல் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : காரணமே இல்லாமல் பைக்கில் சென்ற இளைஞரை தாக்கிய காவலர்கள்.. ஷாக் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

19 Nov 2025 13:50 PM

 IST

இந்தியாவில் சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் சில விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு வாகன ஓட்டிகள் விதிகளை பின்பற்றவில்லை என்றால், அதற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், பீகாரில் எந்த தவறுமே செய்யாத ஒரு இளைஞரை சாலையில் சோதனையில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், காரணமே இல்லாமல் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

காரணமே இல்லாமல் பைக்கில் சென்ற இளைஞரை தாக்கிய காவலர்கள்

உட்கர்ஷ் மிஸ்ரா என்ற நபர் தனது நண்பர் காரணமே இல்லாமல் காவலர்களால் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். பீகார் போலீசார் எந்த வித காரணமும் இல்லாமல் எனது நண்பனை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் செய்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : இந்திய ரயில் சேவை தான் சிறந்தது.. வெளிநாட்டு பெண்ணின் வீடியோ வைரல்!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை வழிமறிக்கும் காவலர் ஒருவர் ஹெல்மெட்டை அகற்றுமாறு கூறுகிறார். அந்த இளைஞர் தயங்கும் நிலையில், ஆத்திரமடையும் அந்த காவலர் அந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டி அடிக்கிறார். பிறகு சக காவர்களும் ஆந்த இளைஞரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குகின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க : Viral Video : ரயிலில் குளித்த இளைஞர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இணைய வாசிகள் பலரும் அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கை ஒளியால் டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? ஆய்வுகள் சொல்வது என்ன?
பணி நீக்கத்தால் தூய்மை பணியாளராக மாறிய இந்தியர்.. ரஷ்ய செய்து நிறுவனம் தகவல்..
மூன்றாம் உலகப்போர்.. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகுமா?
விமானக் கண்காட்சியின் போது பறவைகள் விபத்து தடுக்க மத்திய அரசின் புதிய முயற்சி.. என்ன தெரியுமா?