Viral Video : ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த பிச்சைக்காரர்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

Beggar Ordered Food From Swiggy | இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் பிச்சைக்காரர் ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த பிச்சைக்காரர்.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

04 Feb 2026 16:54 PM

 IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்தின் உதவியால் இந்த உலகில் நம்மை சுற்றில் நடைபெறும் சுவாரஸ்யமான மற்றும் வித்தியாசமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பிச்சைக்காரர் ஒருவர் ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்தது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. அப்படி அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்த பிச்சைக்காரர்

சாலை ஓரங்களில் பிச்சைக்காரர்களை பார்த்தால் நமக்கு முதலில் நினைவில் வருவது அவர்கள் வருமையின் பிடியில் உள்ளனர். அவர்களுக்கு வீடு, உடை, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான சிக்கல்கள் உள்ளன என்பது தான். என்றைக்காவது நீங்கள் ஒரு பிச்சைக்காரர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதையோ, அந்த ஸ்மார்ட்போனில் இருந்து உணவு ஆர்டர் செய்வதையோ பார்த்திருக்கீர்களா அத்தகைய வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : Viral Video : பால்கனியில் ஆபத்தான முறையில் விளையாடிய சிறுவன்.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ!

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய செல்கிறார். அவர் உரிய இடத்திற்கு சென்றதும், உணவு ஆர்டர் செய்த நபருக்கு போன் செய்கிறார். அந்த நபர் நான் இங்கு தான் படுத்திருக்கிறேன் என கூறுகிறார். அதனை கேட்டு அந்த நபர் அங்கு சென்று பார்க்கிறார். அப்போது சாலை ஓரத்தில் படுத்துக் கிடக்கும் பிச்சைக்காரர் ஒருவர் தான் போனில் பேசியது என்பதை அந்த டெலிவரி ஊழியருக்கு தெரிய வருகிறது.

இதையும் படிங்க : இதுதான் அதிர்ஷ்டம்… உடைந்து நொறுங்கிய மின் கம்பம்.. நூலிழையில் தப்பிய சிறுவன் வீடியோ!

அப்போது சிறிது சந்தேகத்துடன் நீங்கள் தான் உணவு ஆர்டர் செய்தீர்களா என்று அந்த டெலிவரி ஊழியர் கேட்கிறார். அதற்கு அந்த நபர் ஏன், நான் உணவு ஆர்டர் செய்யக்கூடாதா என கேட்கிறார். உடனே அந்த ஊழியர் அப்படியெல்லாம் இல்லை என கூறி அந்த உணவை டெலிவரி செய்துவிட்டு வருகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

உலகின் ஆபத்து நிறைந்த சவாலான விமான நிலையங்கள்
மனப் பயிற்சிகள் பல வழிகளில் நன்மை பயக்கும்.. வியக்கு வைக்கும் ஆய்வுகள்
7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வாயில் கவ்விச்சென்ற புலி... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் பாதை