Viral Video : Air India விபத்தில் சிக்கிய British சுற்றுலா பயணிகள்.. கடைசி வீடியோ இணையத்தில் வைரல்!

British Tourists Final Video Goes Viral | நேற்று (ஜூன் 12, 2025) அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 241 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் இரண்டு பேர் விமானம் ஏறுவதற்கு முன்னதாக பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : Air India விபத்தில் சிக்கிய British சுற்றுலா பயணிகள்.. கடைசி வீடியோ இணையத்தில் வைரல்!

வைரல் வீடியோ

Published: 

13 Jun 2025 19:29 PM

அகமதாபாத்தில் (Ahemadabad) நேற்று (ஜூன் 12, 2025) நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து (Air India Flight Crash) உலகையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் இருவர், தாங்கள் ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் புறப்படுவதற்கு முன்னதாக பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தி வெளியாகி வைரலாகி வருகிறது. இதுதான் அவர்களின் கடைசி வீடியோ என கூறப்படுகிறது. இந்த நிலையில், லண்டன் சுற்றுலா பயணிகளின் கடைசி பதிவு என இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

241 பேரை பலி வாங்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

குஜராத் மாநில அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக ஏர் இந்தியாவின் AI 171 விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் ஏற்பட்ட திடீரெ கோளாறு காரணமாக , விமான நிலையத்திற்கு அருகில் இருந்த பிஜே மருத்துவ கல்லூரி விடுதியின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம் விடுதியில் மோதி வெடித்த நிலையில், விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் எமர்ஜென்சி எக்ஸிட் அருகே அமரிந்திருந்த ஒருவர் மட்டும் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பினார். விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையேன் கழும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விமான விபத்தில் சிக்கிய பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளின் கடைசி வீடியோ

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானத்தில் இந்தியர்கள் மட்டுமன்றி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த 7 பேர் மற்றும் கனடா நாட்டை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்னதாக விமான நிலையத்தில் இருந்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

அதில், இந்தியா பயணம் குறித்த தங்களது அனுபவத்தை இருவரும் பகிர்ந்துக்கொள்கின்றனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இந்தியாவை விட்டு செல்வதாக அதில் கூறுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.