Viral Video : வைரல் வீடியோவால் மீண்டும் பெற்றோருடன் இணைந்த பச்சிளம் குழந்தை!
Abandoned Baby Reunites with Parents | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். இந்த வீடியோக்கள் பொழுதுபோக்கிற்காக மட்டுமே என இருந்த நிலையில், தற்போது வைரல் வீடியோவின் மூலம் பச்சிளம் குழந்தை ஒன்று மீண்டும் தனது பெற்றோருடன் சேர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வைரல் வீடியோ
இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அவற்றில் சில வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் சில வீடியோக்கள் சிரிப்பை உண்டாக்கும். இவ்வாறு இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள் பொழுதுபோக்கு அம்சத்திற்கானதாக இருந்து வரும் நிலையில், ஒரு வைரல் வீடியோவின் மூலம் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று தனது பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்றது எங்கே, வைரல் வீடியோவின் மூலம் குழந்தை தனது பெற்றோரிடம் சேர்ந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெற்றோர்களால் மருத்துவமனையில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை
இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் மருத்துவர் ஒருவர், பெற்றோர்களால் மருத்துவமனையில் கைவிடப்பட்ட பெண் குழந்தையை குறித்து உணர்வு பூர்வமாக பேசியுள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், இந்த குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததன் காரணமாக அவரது பெற்றோர் மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இந்த குழந்தையின் பெற்றோருக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மூன்றாவதும் பெண் குழந்தையாக பிறந்த விரக்தியில் அவர்கள் இத்தகைய செயலை செய்துள்ளனர்.
மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்ததால் இந்த குழந்தையின் தந்தை அவரது மனைவிக்கு அழைத்து பேசவே இல்லை. இதன் காரணமாக குழந்தையின் தாயும் இந்த குழந்தையை ஒதுக்க முடிவு செய்துவிட்டார். நாம் 21 ஆம் நூற்றாண்டில் உள்ளோம். நமது நாட்டின் குடியரசு தலைவர் ஒரு பெண். பெண் விண்வெளி வீரரான சுனிதா வில்லியம்ஸ் 9 மாத காலமாக விண்வெளியில் தங்கியிருந்தார். அவரைபோல தான் இந்த குழந்தையும். 9 மாதங்கள் தாயின் கருவறையில் இருந்த பிறகு பல கனவுகளுடன் பிறந்துள்ளது.
இணையத்தில் வைரலாகும் மருத்துவரின் வீடியோ
மருத்துவரின் இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாக தொடங்கிய நிலையில், பலரும் அந்த குழந்தையை தத்தெடுக்க ஆர்வம் காட்டியுள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த குழந்தையின் பெற்றோருக்கு சட்டப்படி தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கல் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். இதற்கிடையே மருத்துவர் சுஷ்மா குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பலரும் குழந்தையை தத்தெடுக்க அர்வம் காட்டியது குறித்து அவர் கூறியுள்ளார். குழந்தைக்காக இவ்வளவு மக்கள் தவமாக உள்ளதை உணர்ந்த குழந்தையின் பெற்றோர் தாங்களே குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
குழந்தையை பெற்றுகொள்ள சம்மதித்த பெற்றோர்
குழந்தையை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், மருத்துவர் சுஷ்மா அது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக வீடியோ பகிர்ந்துள்ளார். தற்போது இந்த இரண்டு வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.