Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : நடுக்கடலில் சுராவுக்கு முத்தமிட்ட இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Girl Kissing Shark in Mid Sea | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் நடுக்கடலில் சுரா மீனுக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ உண்மையா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : நடுக்கடலில் சுராவுக்கு முத்தமிட்ட இளம் பெண்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Jun 2025 16:09 PM

இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் வியப்பூட்டும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இளம் பெண் ஒருவர் கடலில் சுராவுக்கு முத்தல் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சுரா மிகவும் ஆபத்தான உயிரினம் என்பதால் அதனுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியாது என கூறும் சிலர், இந்த வீடியோ செயற்கை நுண்ணரிவால் (Artificial Intelligence) உருவாக்கப்பட்டது என கூறுகின்றனர். ஆனால், வேறு சிலரோ இந்த வீடியோ குறித்து வியப்பாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

சுரா மீனுக்கு முத்தம் கொடுத்த இளம் பெண்

சுராக்கள் மிகவும் ஆபத்தான கடல்வாழ் உயிரினமாக உள்ளன. காரணம், சுராக்களுக்கு வேட்டையாடும் திறன் உண்டு. அவை மற்ற மீன்களை போல சாதுவானவை அல்ல. அதுமட்டுமன்றி சுராக்களுக்கு மிக கூர்மையான பற்கள் இருக்கும். இதன் காரணமாக அவை கடித்தால் மனிதனின் உடல் பாகங்கள் துண்டாகிவிடும் அளவுக்கு அபாயம் மிக்கவை. இந்த நிலையில், இளம் பெண் ஒருவர் நடு கடலில் சுரா மீனை கட்டி அணைத்தபடி அதற்கு முத்தமிடுவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் இளம் பெண்ணின் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நீல நிற உடை அணிந்த இளம் பெண் ஒருவர் நடு கடலில் சுராவிற்கு மிக அருகில் உள்ளார். அந்த பெண் சுரா மீனை கட்டி அணைத்த படி தனது ஸ்மார்ட்போன் மூலம் அதனை வீடியோ எடுக்கிறார். அப்போது அந்த சுரா மீன் பெண் மீது பாசமாக சாயவே அவர் அதற்கு முத்தமிடுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் உள்ளது. மேலும், இணையத்தில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் சுராவின் நம்பிக்கையை பெறுவதற்கு அந்த பெண்ணுக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையா? செயற்கை நுண்ணறிவா?

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அது உண்மையா அல்லது செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் உருவானதா என்ற பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. நடு கடலில் இருப்பதை போல தோன்றும் அந்த பெண்ணின் மீது ஒரு துளி கூட கடல் நீர் இல்லை. இது முற்றிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்று ஒருவர் கூறியுள்ளார். சுராக்கள் இத்தகை செயல்களை ஒருபோது செய்யாது என்று மற்றொருவர் கூறியுள்ளார். ஆனால், சிலர் அதனை உண்மை என நம்பும் விதமாக வியப்புடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.