Viral Video : ரொமான்ஸ் செய்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜோடி.. ரூ.53,500 அபராதம் விதித்த காவல்துறை!
Noida Couple Fined 53,300 Rupees for Romantic Bike Stunt | சாலை விதிகளை பினபற்றாமல் பயணம் செய்யும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில், இருசக்கர வாகனத்தில் ரொமான்ஸ் செய்தபடி சென்ற காதல் ஜோடிக்கு நொய்டா போலீஸ் ரூ.53,300 அபராதம் விதித்துள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் அதற்கு குறிப்பிட்ட சில விதிகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு விதிகளை பின்பற்றாமல் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அந்த வகையில், நொய்டா (Noida) சாலையில் ரொமான்ஸ் செய்தபடி இரு சக்கர வாகனத்தில் (Romantic Bike Stunt) சென்ற ஜோடிக்கு, நொய்டா போலீசார் (Noida Police) ரூ.53,300 அபராதம் விதித்துள்ளனர். இந்த நிலையில், அந்த ஜோடி ரொமான்ஸ் செய்தபடி இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.
ரொமான்ஸ் செய்தபடி இருசக்கர வாகனத்தில் சென்ற ஜோடி
இந்தியாவை பொருத்தவரை சாலையில் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும் என்றால் ஓட்டுநர் உரிமம், ஹெல்மெட் உள்ளிட்டவை கட்டாயமாக உள்ளது. இது தவிர மது அறுந்திவிட்டு வாகனம் ஓட்ட கூடாது, அதிவேகமாக வாகனம் ஓட்ட கூடாது உள்ளிட்ட விதிகளோடு, பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் எந்தவித செயல்களையும் செய்ய கூடாது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், காதல் ஜோடி ஒன்று பைக்கில் ரொமான்ஸ் செய்தபடி சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர்களுக்கு ரூ.53,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




இணையத்தில் வைரலாகும் வீடியோ
नोएडा में जान जोखिम में डाल एक्सप्रेसवे पर इश्क फरमाता दिखा प्रेमी जोड़ा,चलती बाइक पर रोमांस करते नजर आया कपल,ट्रैफिक पुलिस ने काटा 53,500 रुपये का चालान
@Uppolice @noidapolice pic.twitter.com/TH9r5NjA9m— RAVINDER JAINT (ABP NEWS) (@ravinderjaint) June 16, 2025
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்டிச் செல்கிறார். அந்த வாகனத்தின் டேங் மீது அமர்ந்துக்கொண்டு இருக்கும் பெண் ஒருவர், திரும்பி இளைஞரை கட்டிபிடித்தபடி அமர்ந்துள்ளார். இருவரும் கட்டிபிடித்தபடி அந்த இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்கின்றனர். இந்த வீடியோ வெறுக் 5 விநாடிகள் மட்டுமே உள்ள நிலையில், அது இணையத்தில் வெளியானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ரூ.53,300 அபராதம் விதித்த போலீஸ்
उक्त शिकायत का संज्ञान लेते हुए संबंधित वाहन के विरुद्ध यातायात नियमों का उल्लंघन करने पर नियमानुसार ई-चालान (जुर्माना 53500/- रुपए) की कार्यवाही की गई है। pic.twitter.com/oxFkPti07b
— Noida Traffic Police (@Noidatraffic) June 15, 2025
அந்த காதல் ஜோடிக்கு அபராதம் விதித்தது தொடர்பாக நொய்டா போலீஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், பலரும் அதற்கு வரவேற்பு தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.