Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kuberaa : எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனுஷின் குபேரா.. ப்ரீ- புக்கிங் ஆரம்பம்!

Kuberaa Ticket Booking begun : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும், தனுஷின் நடிப்பில் தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் குபேரா. வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தின் புக்கிங் தீவிரமாக ரசிகர்கள் மத்தயில் பதிவாகிவருகிறது.

Kuberaa : எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனுஷின் குபேரா..  ப்ரீ- புக்கிங் ஆரம்பம்!
குபேரா திரைப்படம் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 16 Jun 2025 20:37 PM

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் (Rashmika Mandanna) முன்னணி நடிப்பில் பான் இந்தியப் படமாக உருவாகியிருப்பது குபேரா (Kuberaa). இந்த படத்தில் முன்னணி நாயகனாக நடிகர் தனுஷ் (Dhanush) நடித்துள்ளார். தெலுங்கு மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா (Sekhar Kammula) இயக்கியுள்ளார். தெலுங்கு இயக்குநரான இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, அவருடன் முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா (Nagarjuna)  நடித்துள்ளார். நடிகர் தனுஷின் 51வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் படத்தின் டிக்கெட் முன்பதிவு (Ticket pre booking ) இன்று 2025, ஜூன் 16ம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது. தற்போது ரசிகர்கள் தீரமாக டிக்கெட் முன்பதிவில் இறங்கியுள்ளனர். தற்போது இது தொடர்பான அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

குபேரா படக்குழு வெளியிட்ட டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு :

தனுஷ் மற்றும் நாகார்ஜுனாவின் கூட்டணி :

இந்த குபேரா படமானது ஒரு ஹீரோ படமாக இல்லாமல், டபுள் ஹீரோ படமாகவே உருவாகியிருக்கிறது. டிரெய்லரில் இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரமும் நடிகர் நாகராஜூனாவின் கதாபாத்திரமும் சம அளவில் இடம்பெற்றுள்ளது. இந்த படமானது அரசியல் சார்ந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.

இந்த படத்தில் நடிகர் தனுஷ் தேவா என்ற பிச்சைக்காரன் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 2025, ஜூன் 15ம் தேதியில் வெளியானது. இணையத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் இதுவரை பல மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

குபேரா படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்ப்பு ;

நடிகர் தனுஷின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த குபேரா பான் இந்திய மொழிகளில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கி மற்றும் தயாரித்திருக்கிறார். இந்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். பிரம்மாண்ட படமாக உருவாகியிருக்கும் இந்த குபேரா சுமார் ரூ. 120 கோடி பொருட்செலவில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு தனுஷ் சுமார் ரூ. 30 கோடிகளைச் சம்பளமாகப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்கள் மட்டும் உள்ள நிலையில் படத்தின் முன்பதிவு சிறப்பாக நடந்து வருகிறது.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...