Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vaibhav : வைபவின் அசத்தல் நகைச்சுவையில்.. ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர்!

Chennai City Gangsters Movie Trailer : சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வைபவ். இவரின் நடிப்பில் கோலிவுட் சினிமாவில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் இவரின் நடிப்பில் நகைச்சுவை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து உருவாகியிருக்கும் படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். தற்போது இப்படத்தின் ரிலீஸ் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Vaibhav : வைபவின் அசத்தல் நகைச்சுவையில்.. ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர்!
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 16 Jun 2025 21:10 PM

நடிகர் வைபவ் (Vaibhav) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகவிருக்கும் படம்தான் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (Chennai City Gangsters). இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர் (Vikram Rajeshwar) இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை இவருடன் எழுத்தாளர் அருண் கேசவ் (Arun Keshav) எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் வைபவின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தொடர்பான அறிவிப்புகள் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகியிருந்தது. மேலும் இப்படம் ஆரம்பத்தில் கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. பின் சில பிரச்னைகளின் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிபோனது.

இந்நிலையில், இப்படமானது 2025, ஜூன் 20ம் தேதியில் தனுஷின் குபேரா (Kuberaa)  மற்றும் அதர்வாவின் டிஎன்ஏ (DNA) போன்ற படங்களுடன் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் படக்குழு ரிலீஸ் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ட்ரெய்லரானது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படக்குழு வெளியிட்ட ரிலீ ட்ரெய்லர் பதிவு :

இந்த திரைபடத்தில் நடிகர் வைபவிற்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள அதுல்யா ரவி தமிழில் ஏற்கனவே பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார். மேலும் இந்த இடத்தில் நடிகர்கள் ஆனந்த ராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, பாலா சரவணன், லிவிங்ஸ்டன் மற்றும் மணிகண்டன் ராஜேஷ் என பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் கதைக்களம் :

இந்த படத்தில் நடிகர் வைபவ் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமானது முற்றிலும் நகைச்சுவை சார்ந்த கதைக்களத்துடன் அமைந்துள்ளது. இந்த படத்தில் நண்பர்கள் கூட்டம் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் திரைப்படமாக இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் அமைந்துள்ளது.

மேலும் வைபவின் காதல் , டைமிங் காமெடி மற்றும் ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை என இப்படத்தில் நகைச்சுவைக்குப் பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது. குபேரா மற்றும் டிஎன்ஏ போன்ற பிரம்மாண்ட படங்களுடன் வெளியாகும் இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!
பந்தை சேதப்படுத்தியதா திண்டுக்கல் டிராகன்ஸ்? அஸ்வின் மீது புகார்!...
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?
சிலம்பரசனின் 'எஸ்டிஆர் 49' படம் கைவிடப்பட்டதா?...
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!
அஜித் குமார் - ஷாலினியுடன் நடிகர் சதீஷ்!...
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்
கூட்டணி ஆட்சி என எடப்பாடி பழனிசாமி சொல்லவில்லை - திருமாவளவன்...
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு 2 நாட்களுக்கு முன் தோன்றும் அறிகுறிகள்!...
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!
வைபவ் நடித்த 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படத்தின் ட்ரெய்லர்!...
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
தனுஷின் 'குபேரா' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருகிறாரா சஞ்சு சாம்சன்?...
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!
ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ய பயன்படுத்திய கத்தி கண்டுபிடிப்பு!...
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு..
ஏர் இந்தியா விமானத்தில் ஏசி இல்லாமல் 5 மணி நேரம் காத்திருப்பு.....
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்
வீட்டில் செய்யும் மாங்காய் ஊறுகாய் கெடாமல் இருக்கணுமா? டிப்ஸ்...