AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மகளிர் டி20 உலகக் கோப்பை

மகளிர் டி20 உலகக் கோப்பை

மகளிர் டி20 உலகக் கோப்பையானது கடந்த 2009-ல் நிறுவப்பட்ட சர்வதேச மகளிர் கிரிக்கெட்டின் மிகப்பெரிய போட்டியாகும். இந்தப் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐசிசி) ஏற்பாடு செய்யப்படுகிறது. அதன்படி, உலக அரங்கில் மகளிர் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாக ஐசிசி கொண்டுள்ளது. டி20 வடிவம் அதன் வேகமான, விறுவிறுப்பான மற்றும் குறைந்த ஓவர்கள் கொண்ட ஆட்டமுறையால் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது. மேலும் மகளிர் கிரிக்கெட் இந்த டி20 வடிவதிலும் தங்களது திறமைகளை திறம்பட வெளிப்படுத்தி வருகிறது. முதல் மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்றது, அதில் இங்கிலாந்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு பட்டத்தை வென்றது. அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி, இதுவரை நடந்த 9 பதிப்புகளில் 6 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது. அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பையில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. கோப்பைக்கான போராடி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை மகளிர் டி20 உலகக் கோப்பை வழங்கி வருகிறது.

Read More