மொபைல் சார்ஜரில் ஏன் இரண்டு பின்கள் மட்டுமே உள்ளன?.. உங்களுக்கு தெரியுமா?
Why Mobile Charger Has Only Tow Pins | அனைவரும் தங்களது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய சார்ஜர்களை பயன்படுத்துவர். ஆனால், பெரும்பாலான நபர்கள் தங்களது மொபைல் சார்ஜரில் ஏன் இரண்டு பின்கள் மட்டுமே உள்ளன என்பது குறித்து தெரியாமலே உள்ளனர்.

மாதிரி புகைப்படம்
மனிதர்கள் அன்றாட வாழ்வில் உள்ள அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே மொபைல் போன் சார்ஜர்கள் (Mobile Phone Charger) மாறிவிட்டன. பெரும்பாலான பொதுமக்கள் சார்ஜர் இல்லாமல் வெளியே செல்ல மாட்டர். எப்போது வேண்டுமானாலும் ஸ்மார்ட்போனில் சார்ஜ் குறைந்துவிடும். எனவே உடனடியாக சார்ஜ் செய்ய சார்ஜர்கள் கட்டாயம் என அவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு மனிதர்கள் தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் சார்ஜர்களில் உள்ள சிறப்பு அம்சம் குறித்து பலரும் தெரிந்துக்கொள்ளாமல் உள்ளனர். அதுதான் சார்ஜர் பின்கள் (Charger Pin). அதாவது சார்ஜர்களில் ஏன் இரண்டு பின்கள் மட்டும் உள்ளன என்று உங்களுக்கு தெரியுமா?. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அன்றாட வாழ்வின் தேவைகளில் ஒன்றாக மாறிய சார்ஜர்கள்
மனிதர்களின் வாழ்வில் ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கு வக்கின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் தங்களது தகவல் பரிமாற்ற தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்காள் இவ்வளவு முக்கிய பொருளாக உள்ள நிலையில், அந்த ஸ்மார்ட்போன்களை இயக்க உதவும் முக்கிய கருவியாக சார்ஜர் உள்ளது. காரணம் சார்ஜ் இருந்தால் தான் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த முடியும். இந்த நிலையில், மொபைல் போனை சார் செய்வதற்கு சார்ஜர்கள் மிக அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : GPS : ஜிபிஎஸ் மூலம் ஒருவர் என்ன செய்கிறார் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.. எச்சரிக்கும் ஐஐடி ஆய்வு!
சார்ஜர்களில் இரண்டு பின்கள் மட்டுமே இருப்பது ஏன்?
மனிதர்கள் தங்களது வீட்டில் பயன்படுத்தும் ஏசி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களுக்கு மூன்று பின்களுடைய கேபிள்கள் இருக்கும். ஆனால், சார்ஜர்களில் மட்டும் இரண்டு பின்கள் மட்டுமே இருக்கும். இதற்கு பின்னால் அறிவியல் காரணம் ஒன்று உள்ளது. அதாவது டிவி, ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் இயங்க வீட்டுக்கு வரும் மின்சாரத்தை ஏசி-ல் (AC – Alternating Current) இருந்து மொபைல் சார்ஜர் பெறுகிறது. மின்சாதன பொருட்களை இயக்க ஃபேஸ் (Phase), நியூட்ரல் (Neutral) மற்றும் இயர்த் (Earth) ஆகியவை தேவைப்படுகிறது.
இதையும் படிங்க : ஸ்மார்ட்போன்களுக்கு வேறு சார்ஜர்களை பயன்படுத்த கூடாதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஆனால் மொபைல் சார்ஜரை இயக்க Phase மற்றும் Neutral ஆகிய அம்சங்கள் மட்டுமே போதுமானவையாக உள்ளன. இதன் காரணமாக தான் மொபைல் போன் சார்ஜர்களில் வெறும் இரண்டு பின்கள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.