போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா? எப்படி செய்வது?

WhatsApp Latest Feature : உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மெசேஜிங் செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மேலும் வாட்ஸ்அப் அதன் பயனர்களின் வசதிக்காக அடிக்கடி புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப்பில் போன் நம்பரை சேமிக்காமல் நேரடியாக கால் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

போன் எண்ணை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் கால் செய்ய முடியுமா? எப்படி செய்வது?

மாதிரி புகைப்படம்

Published: 

14 Jun 2025 19:27 PM

 IST

உலகம் அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களுக்கான வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெட்டா (Meta) ஏஐ மூலம் பல வசதிகளை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது, ஒருவர் நம்பரை சேமிக்காமல் நேரடியாக வாட்ஸ்அப்பில் கால் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஒரு முறை மட்டுமே பேசுவதற்காக தேவையில்லாமல் போன் நம்பரை சேமிக்க தேவையில்லை. வழக்கமாக நம் போனில் இருந்து கால் செய்வது போல நேரடியாக போன் செய்யலாம். இதனால் உங்கள் கான்டாக்டில் தேவையில்லாமல் நம்பரை சேமிக்கும் பிரச்னை குறையும். இந்தியா டிவி கட்டுரையில் வெளியான கட்டுரையின் படி வாட்ஸ்அப்பில் போன் நம்பரை சேமிக்காமல் கால் செய்வது எப்படி என பார்க்கலாம்.

போன் நம்பரே சேவ் செய்யாமல் வாட்ஸ்அப்பில் கால் செய்யும் வசதி

இதுவரை, ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் கால் செய்ய, அவரின் நம்பரை உங்கள் போன் காண்டாக்டில் சேமிக்க வேண்டும் என்ற நிலைமையே இருந்தது. ஆனால், இந்த புதிய அப்டேட்டுடன், நேரடியாக எண்ணை டையல் செய்து கால் செய்யலாம். இது சாதாரண டயலர் போன்று செயல்படுகிறது. இது இனி வழக்கமாக போனில் இருந்து கால் செய்வது போல வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக கால் செய்யலாம்.

இந்த வசதி எப்போது பயனுள்ளதாக இருக்கும்?

வணிகம் சார்ந்து கஷ்டமர்களை ஒரே ஒரு முறை தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

அவசர காலங்களில் வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக போன் செய்ய முடியும்.

டெலிவரி மற்றும் சேவை சார்ந்து உடனடியாக வாட்ஸ்அப் கால் செய்ய முடியும்.

டிராவல் ஏஜென்சிகள் பயணிகளை தொடர்புகொள்ள பயன்படும்.

போன் நம்பரை சேமிக்காமல் எப்படி வாட்ஸ்அப் கால் செய்வது?

  1. உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும்.

  2. கீழே உள்ள Calls  டேபில் செல்லவும்.

  3. மேலே வலது மூலையில் உள்ள + ஐகானை கிளிக் செய்யவும்.

  4. கீழ்க்கண்ட மூன்று ஆப்சன்கள் காணப்படும்:

    • New Call Link

    • Call a Number

    • New Contact

  5. இவற்றில் Call a Number என்பதைத் தேர்வு செய்யவும்.

  6. புது டயலர் திரையில் தோன்றும். இதில் நீங்கள் அழைக்க வேண்டிய எண்ணை உள்ளிடவும்.

  7. பிறகு, Call பட்டனை அழுத்தி நேரடியாக வாட்ஸ்அப் கால் செய்யலாம்.

  • இந்த வசதி உங்கள் வாட்ஸ்அப் செயலியில் சமீபத்திய அப்டேட்டில் மட்டுமே காணப்படும்.

  • உங்கள் வாட்ஸ்அப் பதிப்பை புதுப்பித்து கொள்ளுங்கள்.

  • இந்த வசதி Android மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கும்.

வாட்ஸ்அப்பின் இந்த புதிய வசதி, பயனர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கக்கூடியதாகும். தேவையற்ற நம்பர்களை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக பேசும் சுதந்திரத்தை இது வழங்குகிறது. இது வாட்ஸ்அப் பயன்பாட்டை மேலும் வசதியாகவும் நேர்த்தியாகவும் மாற்றியுள்ளது.

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை