வாட்ஸ்அப் செயலியில் வரப்போகும் வாட்ஸ்அப் பிளஸ்.. சோதனை!

WhatsApp Plus Feature In WhatsApp | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தை சோதனை செய்ய தொடங்கியுள்ளது. பல்வேறு அட்டகாசமான அம்சங்கள் உடன் சோதனையில் உள்ள இந்த அம்சம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியில் வரப்போகும் வாட்ஸ்அப் பிளஸ்.. சோதனை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

22 Apr 2026 00:24 AM

 IST

மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு வாட்ஸ்அப் ஒரு சிறந்த தேர்தவாக உள்ளதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகவே வாட்ஸ்அப் மாறிவிட்டது. இந்த நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல்வேறு புதிய புதிய அம்சங்களை அறிமுகம்  செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் பிளஸ் (WhatsApp Plus) என்ற அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் நிலையில், அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் செயலியில் வரப்போகும் வாட்ஸ்அப் பிளஸ்

வாட்ஸ்அப் செயலியில் வருவாயை பெருக்கும் வகையில் அந்த நிறுவனம் கையில் எடுத்துள்ள அம்சம் தான் இந்த வாட்ஸ்அப் பிளஸ். இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தில் சாதாரண பயனர்கள் பெறுவதை விட சில கூடுதல் சிறப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாட்ஸ்அப் பிளஸ் அம்சத்தை சப்ஸ்கிரைப் செய்யும் பயனர்கள் விளம்பரங்கள் இல்லாமல் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

வாட்ஸ்அப் பிளஸ் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்?

வாட்ஸ்அப் பிளஸ் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றால் அதில் இருக்கும் குறுஞ்செய்தி, ஆடியோ கால், வீடியோ கால் ஆகிய அம்சங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுமோ என்று பலரும் அஞ்சுகின்றனர். ஆனால், அது அப்படி அல்ல. இந்த வாட்ஸ்அப் பிளஸ் சப்ஸ்கிரைப் செய்யவில்லை என்றாலும் பயனர்கள் வழக்கமாக குறுஞ்செய்தி, ஆடியோ கால் மற்றும் வீடியோ கால் ஆகிய அம்சங்களை பெற முடியும்.

இதையும் படிங்க : ஆப்பிள் 18 ப்ரோ ஸ்மார்ட்போன்.. என்ன என்ன அம்சங்கள்.. வெளியான முக்கிய தகவல்கள்!

இந்த புதிய வாட்ஸ்அப் பிளஸ் அம்சம் மாதம் ரூ.274 என்ற சந்த அடிப்படையில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக ஸ்டிக்கர் அம்சங்கள், ஸ்டிக்கர்களை நேரடியாக பதிவிறக்கம் செய்துக்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் கிடைக்கும். தற்போது சோதனையில் உள்ளா இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..