ஏஐ சாட் முதல் வீடியோ கால் வரை… முழுமையான வணிகதளமாக மாறும் வாட்ஸ்அப்
Meta upgrades WhatsApp tools : விளம்பரங்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவை என ஒரே இடத்தில் அனைத்து வசதிகளையும் பயன்படுத்துவதற்காக மூன்று முக்கிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இது சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் ஒருங்கிணைந்த வியாபார தளமாக மாறவிருக்கிறது.

மாதிரி புகைப்படம்
மெட்டா (Meta) நிறுவனம் நடத்திய கான்வெர்சேஷன் 2025 என்ற நிகழ்ச்சியில் வாட்ஸ்அப்பிற்கான (WhatsApp) புதிய வணிக அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன்மூலம் வாட்ஸ்அப் சாதாரண மெசேஜிங் செயலியில் இருந்து, முழுமையான வணிக தளமாக மாறவிருக்கிறது. அமெரிக்காவின் மியாமியில் நடைபெற்ற இந்த விழாவில், வாட்ஸ்அப் பிஸினஸ் பிளாட்ஃபாமிற்கான மூன்று முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. இவை வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தும் வகையைில் அமைந்துள்ளன. அதில், ஏஐ சேவையை வலுப்படுத்தும் மற்றும் வாடிக்கையாளர்களுடன் பேசும் முறையை முழுமையாக மாற்றும் வகையில் இருக்கின்றன.
அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில்!
முதல் அம்சமாக, வாட்ஸ்அப்பில் வணிக பிரிவில் இனி மெட்டா Ad Manager வழியாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றுக்கான விளம்பரங்களை ஒரே இடத்தில் உருவாக்கி, நிர்வகிக்கலாம்.
வாடிக்கையாளர் விவரங்களைப் பதிவேற்றிய பிறகு, விற்பனை தொடர்பாக நீங்களை டைப் செய்து அனுப்பலாம் அல்லது Advantage+ AIயை பயன்படுத்தி தானாகவே செலவு மற்றும் டெலிவரியை மேம்படுத்தலாம். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் கூட விளம்பரத்துக்கான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
மார்க்கெட்டிங்கிற்கு நண்பனாக செயல்படும் ஏஐ சாட் அசிஸ்டென்ட்
இரண்டாவது முக்கிய அம்சமாக, மெட்டா ஏற்கனவே பொதுவான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வசதியை வழங்கியது. ஆனால் இப்போது, ஏஐ சாட்பாட் மூலம் தனிப்பட்ட பரிந்துரைகளை வழங்கும், வாடிக்கையாளர்களை புரிந்துகொண்டு பதிலளிக்க உதவும். இந்த அம்சம் தற்போது மெக்ஸிகோவில் செயல்படத் துவங்கியிருக்கிறது. விரைவில் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.
வாடிக்கையாளருடன் நேரடியாக பேசுவதற்கா வாய்ஸ் கால் வசதி
மூன்றாவது மற்றும் மிகவும் முக்கியமான அம்சமாக, வாட்ஸ்அப் பிசினெஸ் பிளாட்ஃபாமில் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சேவையை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஒப்புதல் அளித்தவுடன், நேரடியாக அவர்களுடன் அழைக்கவும், அவர்களிடமிருந்து அழைப்பு பெறவும் முடியும். இதனால் வாடிக்கையாளர் சேவை மிக வேகமாகவும், நம்பகமாகவும் வழங்க முடியும். கூடுதலாக வாய்ஸ் நோட்ஸ் சேவையும் இதில் முக்கியமான ஒன்று. வணிகம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் குரல் பதிவாக அனுப்ப முடியும். இது நிதி ஆலோசனை, கல்வி போன்ற துறைகளில் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக மெட்டா தெரிவித்ததாவது, இந்த வசதிகள் எதிர்காலத்தில் ஏஐ வாய்ஸ் சாட் உதவியாளர்களாக கூட வளர வாய்ப்பு உள்ளது. இதன் மூலம், வாட்ஸ்அப் செயலியை வணிகம் சார்ந்த அனைத்துப் பயன்பாடுகளுக்குமான ஒரே இடமாக மாற்றும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் இப்போது விளம்பரங்கள், விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேவையையும் ஒரே இடத்தில் செய்வதற்கான அனைத்து வசதிகளும் வந்துவிட்டன. இவை சிறு வணிகர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் ஒருங்கிணைந்த மார்க்கெட்டிங் மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை அனுபவத்தை தரும். இதன் மூலம் வாட்ஸ்அப் முழுமையான வணிகதளமாக மாறியிருக்கிறது.