WhatsApp : ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை.. 10 கோடி மக்கள் பாதிப்பு!
WhatsApp Banned In Russia | உலகம் முழுவதும் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக அங்கு சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
ரஷ்யா, பிப்ரவரி 13 : உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி உள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவில் (Russia) வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யாவில் வாட்ஸ்அப் செயலி தடை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட வாட்ஸ்அப் செயலி
2022 ஆம் ஆண்டு ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போர் தற்போது வரை சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இரு நாடுகளும் மிக கடுமையான இழப்புகளை சந்தித்துள்ளன. பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என பலர் இந்த போரில் சிக்கி பலியாகியுள்ளனர். இதற்கிடையே போரின்போது நாட்டு மக்களின் நடவடிக்கையை உளவு பார்க்கும் பொருட்டு ரஷ்ய நாட்டின் அரசாங்கம் சார்பாக மேக்ஸ் என்ற சமூக வளைத்தள செயலி ஒன்று உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க : 2026-ன் ஆப்பிளின் முதல் ஸ்மார்ட்போன்.. விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 17 இ!
தொலைத்தொடர்பு தகவல்களை கொடுக்க மறுத்த வாட்ஸ்அப்
ரஷ்யா உருவாக்கிய மேக்ஸ் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதனை பொதுமக்கள் அனைவரும் தங்களது ஸ்மார்ட்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ரஷ்யா கூறியது. இந்த நிலையில், பயனர்களின் தொலைத்தொடர்பு தகவல்களை ரஷ்ய அரசாங்கத்திடம் வழங்க வாட்ஸ்அப் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இதையும் படிங்க : ஏஐ இந்திய ஐடி ஊழியர்களை பாதிக்காது.. குட் நியூஸ் சொன்ன நாஸ்காம்!
ரஷ்யாவின் செயலுக்கு வாட்ஸ்அப் கடும் கண்டனம்
அதாவது ரஷ்யா தற்போது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் (Telegram) உள்ளிட்ட வெளிநாட்டு செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யாவில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாமல் சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த கடுமையான நடவடிக்கைக்கு வாட்ஸ்அப் நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.