WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் 19 மொழிகளில் மொழிப்பெயர்க்கலாம்.. வந்தாச்சு Instant Translation அம்சம்!

WhatsApp's New Instant Translation Feature | பயனர்களின் நலனுக்காக மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்யும். அந்த வகையில் தற்போது 19 மொழிகள் வரை குறுஞ்செய்தியை மொழிப்பெயர்த்துக்கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் 19 மொழிகளில் மொழிப்பெயர்க்கலாம்.. வந்தாச்சு Instant Translation அம்சம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Sep 2025 12:15 PM

 IST

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக உள்ளதுதான் மெட்டா (Meta)  நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp). உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்காக மெட்டா வாட்ஸ்அப்பில் அவ்வப்போது பல அசத்தல் அம்சங்களை அறிமுகம் செய்யும். பயனர்களுக்கு மேம்படுத்திய சேவையை வழங்கும் நோக்கில் மெட்டா இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் ஒரு அட்டகாசமான அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது குறுஞ்செய்திகளை மிக விரைவாக மொழிப்பெயர்க்கும் “Instant Translation” அம்சத்தை அது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் வந்த Instant Translation அம்சம் 

உலகம் எங்கிலும் உள்ளவர்களை தொடர்ப்புக்கொள்ள, தகவல் பரிமாற்றம் செய்ய வாட்ஸ்அப் ஒரு சிறந்த செயலியாக உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் வேறு மொழி சார்ந்த நபருடன் உரையாட வேண்டும் என்றால் அவரது மொழியை புரிந்துக்கொள்ள கூகுள் டிரான்ஸ்லேட் (Google Translate) உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. ஆனால், தற்போது அதற்கான தேவை இல்லை.

இதையும் படிங்க : பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்.. இந்த 53 ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. லிஸ்ட் இதோ!

வாட்ஸ்அப் செயலியிலே மொழிப்பெயர்க்கும் அம்சத்தை தான் மெட்டா தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) ஆகிய இரண்டிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆங்கிலம், ஸ்பேனிஷ், ஹிந்தி, போர்ச்சுகல், ரஷ்யன் மற்றும் அரபிக் ஆகிய 6 மொழிகளில் மொழிப்பெயயர்த்துக்கொள்ளவும், ஆப்பிள் பயனர்கள் 19 மொழிகளில் மொழிப்பெயர்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  • இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் தங்களுக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தியை தொடர்ந்து அழுத்த (Long Press) வேண்டும்.
  • அப்போது அந்த குறுஞ்செய்திக்கு மேலே Translate என்ற அம்சம் தோன்றும்.
  • அதனை கிளிக் செய்து எந்த மொழியில் மொழிப்பெயர்க்க விரும்புகிறீர்களோ அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பிறகு நீங்கள் எந்த குறுஞ்செய்தியை வேண்டுமானாலும் மொழிப்பெயர்ப்பு செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : வெறும் ரூ.43,749-க்கு விற்பனை செய்யப்பட உள்ள ஐபோன் 15.. இந்த டீல மிஸ் பண்ணிடாதீங்க!

வாட்ஸ்அப்பில் வரும் குறுஞ்செய்திகளை மொழிப்பெயர்ப்பு செய்ய பயனர்கள் கூகுள் டிரான்ஸ்லேட் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில், பயனிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் சுலபமாக மொழிப்பெயர்ப்பு சேவையை பெறும் வகையில் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.