டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்

TV Remote Colour Buttons : பொதுவாக டிவி ரிமோட்களில் பெயர் குறிப்பிடாமல் 3 வெவ்வேறு நிறங்களில் பட்டன்கள் இருப்பதை கவனித்திருப்போம். பலருக்கும் அதன் பயன் என்ன என்பது குறித்து தெரியாமல் இருக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிவி ரிமோட்டில் உள்ள மஞ்சள், பச்சை, நீலம் பட்டன்கள் எதற்காக தெரியுமா? ஆச்சரிய தகவல்

மாதிரி புகைப்படம்

Published: 

07 Mar 2026 19:51 PM

 IST

நாம் தினமும் பயன்படுத்தும் டிவி ரிமோட்டில் சில கலர் பட்டன்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குறிப்பாக சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீலம் நிறங்களில் இருக்கும் இந்த பட்டன்கள் பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. அது எதற்காக கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன் பயன் என்ன என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இந்த கலர் பட்டன்கள் முதலில் இண்டர்நெட் கணெக்ஷனுட் கூடிய டிவி சேவைகளை எளிதாக பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒரு செயலியை அல்லது மெனுவிற்கு செல்ல பல பட்டன்களை அழுத்துவதற்குப் பதிலாக, இந்த கலர் பட்டன்களை பயன்படுத்தி சில செயல்களை விரைவாக தேர்வு செய்யலாம்.

பல டிவி மற்றும் செட் டாப் பாக்ஸ்களில் டிஜிட்டல் வீடியோ பிராட்கேஸ்டிங் என்ற டிஜிட்டல் ஒளிபரப்பு முறை பின்பற்றப்படுகன்றன. இந்த முறையில் ஸ்கிரீனில் தோன்றும் மெனுக்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை கட்டுப்படுத்த இந்த ஸ்பெஷல் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இது டிவி நிறுவனங்கள், கேபிள் அள்லது செட் டாப் பாக்ஸ் சேவை வழங்கும் நிறுவனங்களை பொறுத்து மாறுபடும்.

இதையும் படிக்க : 200 கி.மீக்கு மேல் மைலேஜ் – ஸ்பிளெண்டரை விட குறைந்த விலையில் ஓலாவின் எலக்ட்ரிக் பைக்

பச்சை பட்டன்

ரிமோட்டில் பச்சை நிறத்தில் உள்ள பட்டன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்க, மெனுவில் ஒரு குறிப்பிட்ட ஆப்சனை தேர்ந்தெடுக்க, செயலிகளை ஓபன் செய்ய பயன்படுத்தப்படும், மேலும் சில டிவிகளில், டிவி கைட் பார்க்கும்போது, ரிமைண்டர் அமைக்க பயன்படுத்தலாம்.

மஞ்சள் பட்டன்

மஞ்சள் நிற பட்டன் பொதுவாக கூடுதல் ஆப்சன்களைத் தேர்ந்தெடுக்க அல்லது செட்டிங்ஸிற்கு செல்ல பயன்படுகிறது. சில டிவிகளில், சப்டைட்டில் அல்லது லாங்வேஜ் செட்டிங்ஸை திறக்க, நிகழ்ச்சியின் கூடுதல் விவரங்களை காண, மெனுவில் திருத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

நீல பட்டன்

நீல நிற பட்டன் பொதுவாக விரைவாக ஒரு ஆப்சனைத் தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஹெல்ப் மெனு ஓபன் செய்ய, நேவிகேஷன் ஆப்சனை தேர்ந்தெடுக்க, இண்டர்நெட் ஆப்சனை தேர்ந்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்க : 129 பாதுகாப்பு குறைபாடுகள் – ஆண்ட்ராய்ட் அப்டேட்டை உடனே பண்ணுங்க – பயனர்களுக்கு கூகுள் எச்சரிக்கை

இந்த பட்டன்கள் ரிமோட்டில் இருந்தாலும் பலர் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. ஒவ்வொரு டிவி மற்றும் செட் டாப் பாக்ஸிலும் இந்த பட்டன்கள் செயல்பாடு மாறுபடுவது,சில டிவி சேவைகள் இந்த அம்சங்களை சப்போர்ட் செய்யாதது, இந்த பட்டன்களின் பயன்பாடு குறித்து தெளிவான விளக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் பலரும் இந்த ஆப்சனை பயன்படுத்தாமல் இருக்கலாம்.

 

Follow Us
இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் நீரில் மூழ்கிய ஈரானின் போர் கப்பல் - 87 பேர் பலி
மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் - பெட்ரோல், டீல் விலை அதிகரிக்குமா?
குவைத் துறைமுகத்தில் எண்ணெய் டேங்கர் அருகில் வெடிப்பு
வாட்ஸ்அப் உரையாடல்கள் மட்டுமே விவாகரத்து வழங்க போதுமானது அல்ல - மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி