Vivo V60e : பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ வி60இ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Vivo V60e Launched in India | விவோ நிறுவனம் தனது வி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ வி60இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vivo V60e : பட்ஜெட் விலையில் அறிமுகமான விவோ வி60இ.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

விவோ வி60இ

Updated On: 

07 Oct 2025 20:54 PM

 IST

இந்தியாவில், இந்தியர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் விவோ (Vivo). விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில், ஸ்மார்ட்போனைகளை அறிமுகம் செய்து வரும் நிலையில், அதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். விவோ நிறுவனம் தனது வி சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (V Series Smartphones) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ வி60இ (Vivo V60e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது விவோ வி60இ ஸ்மார்ட்போன்

இந்த ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் Quad Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6,500 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 90 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியேடெக் டைமன்சிட்டி 7360 டர்போ பிராசசர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வரை கொண்டுள்ளது.

இதையும் படிங்க : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மி 15 எஸ்க் ஸ்மார்ட்போன்.. இவ்வளவு குறைந்த விலையிலா?

விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

  • 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ 60இ ஸ்மார்ட்போன் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ 60இ ஸ்மார்ட்போன் ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ 60இ ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் Vs அரட்டை.. இரண்டில் எது பெஸ்ட்.. என்ன என்ன சிறப்பு அம்சங்கள் உள்ளன!

இந்த ஸ்மார்ட்போன்களின் சேல் அக்டோபர் 10 முதல் விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளதம், பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ புக்கிங் தற்போது கிடைக்கிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.