வாட்ஸ்அப்பில் இருந்து வேறு செயலிக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. புதிய அம்சத்தை சோதனை செய்யும் மெட்டா!
Meta Testing New Feature in WhatsApp | 2025, செப்டம்பர் மாதத்தில் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அம்சத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், மெட்டா நிறுவனம் அந்த அம்சத்தை வாட்ஸ்அப்பில் சோதனை செய்து வருவதாக கூறியுள்ளது.

மாதிரி புகைப்படம்
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் (WhatsApp) விளங்கி வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலியை சோஹோ (Zoho) நிறுவனத்தின் அரட்டை (Arattai) செயலி முந்தியது. இது ஒரு மிகப்பெரிய வரலாற்று திருப்பமாக பார்க்கப்பட்டது. பலரும் வாட்ஸ்அப் செயலியில் இருந்து அரட்டை செயலிக்கு மாற தொடங்கிய நிலையில், தற்போது அரட்டை செயலியில் இருந்து வாட்ஸ்அப்புக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் சோதனை மேர்கொண்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அரட்டை செயலியில் இருந்து வாட்ஸ்அப்புக்கு தகவல் அனுப்புவது குறித்து மெட்டா கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக களமிறங்கிய அரட்டை
தகவல் பரிமாற்றம், புகைப்படங்கள், வீடியோக்களை ஷேர் செய்வது என பல அம்சங்களை ஒரே இடத்தில் ஒன்றாக வழங்கும் செயலியாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் சோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக வாட்ஸ்அப் செயலி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அரட்டை செயலி இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலியை அரட்டை செயலி முந்தியது. காரணம், மத்திய அமைச்சர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் பலரும் வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை செயலிக்கு மாறினர்.
இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராமில் வந்தது டூடுல் அம்சம்.. பயன்படுத்துவது எப்படி?
வாட்ஸ்அப்பில் இருந்து அரட்டை செயலிக்கு மெசேஜ் அனுப்பலாம்
வாட்ஸ்அப்பில் இருந்து வேறு ஒரு செயலிக்கு குறுஞ்செய்தி அனுப்பும் அம்சம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த அம்சம் தற்போது ஐரோப்பாவில் உள்ள பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களை, வாட்ஸ்அப் செயலியில் இருந்து அரட்டை உள்ளிட்ட செயலிகளுக்கு குறுஞ்செய்தியை அனுப்ப அனுமதி வழங்கும். இதற்காக நீங்கள் அரட்டை செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்ற் கட்டாயம் இல்லை. வாட்ஸ்அப்பில் இருந்தபடியே குறுஞ்செய்திகளை அனுப்பலாம்.
இதையும் படிங்க : உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்களா? இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்
2025, செப்டம்பர் மாதம் யுபிஐ போல செயலிகளுக்குள் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்ளும் அம்சத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் இந்த நடவடிக்கையை மெட்டா மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.