இனி WhatsApp Web-லும் ஆடியோ, வீடியோ கால் பேசலாம்.. வந்தது அசத்தல் அம்சம்!
WhatsApp Web Update | மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் வெப் தொடர்பான முக்கிய அம்சம் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம் என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை என பெரும்பாலான இடங்களில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்துகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களுடன் தகவல்களை பரிமாறுவதற்கு வாட்ஸ்அப் பிரதான செயலியாக உள்ள நிலையில், பலரும் வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், வாட்ஸ்அப் வெப் தொடர்பான முக்கிய அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.
இனி வாட்ஸ்அப் வெப்பிலும் ஆடியோ, வீடியோ கால் பண்ணலாம்
ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி அனுப்புவது, ஆடியோ கால், வீடியோ கால் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. ஆனால், வாட்ஸ்அப் வெப்பில் ஆடியோ மற்றும் வீடியோ கால் அம்சங்கள் இல்லை. இதனால் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தும் நபர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தான் மெட்டா நிறுவனம் அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, வாட்ஸ்அப் வெப் பயனர்களும் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசும் அம்சத்தை வழங்கியுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் இருக்கும் அசத்தல் அம்சங்கள்.. இதையெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
படிப்படியாக அமலுக்கு வர உள்ள அம்சங்கள்
பொதுமக்கள் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்தினாலும், அவர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசுவதற்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்து வந்தது. இந்த நிலையில் தான் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் மிகவும் பயனுள்ள இந்த அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் இனி வாட்ஸ்அப் வெப்பிலும் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேச முடியும்.
இதையும் படிங்க : ஏஐ வீடியோக்களுக்கு லேபிள் கட்டாயம்.. ஸ்டிரிக்டாக சொன்ன மத்திய அரசு!
முன்னதாக வாட்ஸ்அப் வெப்பில் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோ மற்றும் ஆவணங்களை அனுப்புவது மட்டுமே சாத்தியமாக இருந்த நிலையில், தற்போது ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி படிப்படையாக அமலுக்கு வரும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.