Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து – உடனே அப்டேட் பண்ணுங்க!

Chrome Security Alert : கூகுள் குரோமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு நம் சிஸ்டமை பாதிக்கக் கூடும். இதனை தவிர்க்கும் பொருட்டு கூகுள் புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. நமது குரோம் பாதுகாப்பானதா? இல்லையா? என்பது குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்

கூகுள் குரோம் பயன்படுத்துகிறீர்களா ? காத்திருக்கும் ஆபத்து – உடனே அப்டேட் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 08 Jun 2025 21:26 PM

உலக அளவில் கூகுள் குரோமில் (Google Chrome)  கண்டுபிடிக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு குறைபாடு உங்கள் கணினியை தாக்க கூடும் என எச்சரிக்கவிடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 27, 2025 அன்று, கூகுள் திரெட் அனலிசிஸ் குரூப் (Google Threat Analysis Group) மூலம் இந்த மிகப்பெரிய குறைபாடு கண்டறியப்பட்டது. இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஹேக்கர்கள், பயனர்களின் அனுமதி இல்லாமல், கணினியில்  பல தீய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இது குரோம் புரோசரில் உள்ள வி8 ஜாவா ஸ்கிரிப்ட் இன்ஜினில் ஆபத்தான செயல்முறைகளை செய்கிறது என்று கூகுள் தெரிவித்திருக்கிறது. இது விண்டோஸ், லினக்ஸ் மற்றும் மேக் ஓஎஸ் உள்ளிட்ட பல ஓஎஸ்களில் இது பாதிப்பை ஏற்படுத்தும் கூகுள் எச்சரித்திருக்கிறது.

உங்கள் Chrome பாதுகாப்பானதா? சரிபார்க்கவும்!

மணி கண்ட்ரோலில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அப்டேட்டானது கடந்த மே 28, 2025  அன்று வெளியிடப்பட்டது. ஆனால் பலருக்கு இது குறித்து விழிப்புணர்வு இல்லாததால் இந்த அப்டேட்டை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். இதனால் அவர்களது சிஸ்டம் அல்லது லேப்டாப் ஆபத்தை சந்திக்கலாம்.  உங்கள் சிஸ்டம் சரியாக இருக்கிறதா என தெரிந்துகொள்ள கீழ்கண்ட வழிகளை பின்பற்றலாம்.

  1. Chrome-இல் மேல்பக்க வலப்புறத்தில் உள்ள (⋮) என்பதை கிளிக் செய்யவும்.

  2. Help > About Google Chrome என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது உங்கள் address bar-இல் chrome://settings/help என டைப் செய்யவும்.

உங்கள் Chrome பதிப்பு 137.0.7151.68 அல்லது அதற்கு மேல் என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதற்கு குறைவான பதிப்பு இருந்தால், குரோம் தானாகவே புதிய அப்டேட்டை மேற்கொள்ளும். ஆனால் சில நேரங்களில் அதனை நீங்களாக மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கும் குரோம்

 

இந்த பிரச்னை பற்றிய விரிவான தகவல்களை கூகுள் இன்னும் வெளியிடவில்லை. இது வழக்கமானது என கூறப்படட்டாலும் அப்டேட்டை உடனடியாக மேற்கொள்வது பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக குரோம் மூலம் இணையத்தை பயன்படுத்தும் தடையின்றி வேகமாக செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும் குரோம் பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதனால் இதுவரை அப்டேட் செய்யாதவர்கள் உடனடியாக அப்டேட் செய்வதன் மூலம் ஹேக்கர்களின் மோசடிகளில் சிக்க வேண்டியிருக்கும்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...