Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

இன்ஸ்டாகிராமின் புதிய ‘எடிட்ஸ்’ ஆப் – இனி ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்!

Instagram Edits App : எடிட்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் புதிய வீடியோ எடிட்டிங் ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி வீடியோக்களை கிரியேட்டிவாகவும் எளிமையாகவும் எடிட் செய்யலாம். இந்த ஆப்பில் என்ன ஸ்பெஷல்? மற்றும் எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமின் புதிய ‘எடிட்ஸ்’ ஆப் – இனி ஈஸியா வீடியோ எடிட் பண்ணலாம்!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 05 Jun 2025 22:25 PM

மெட்டா (Meta) நிறுவனம் நிறுவனத்தின் புதிய முயற்சியாக, எடிட்ஸ் (Edits) என்ற வீடியோ எடிட்டிங் செயலியை இன்ஸ்டாகிராம்  (Instagram) அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் எளிமையான மற்றும் ஆரம்ப நிலையில் இருக்கும் கிரியேட்டர்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த எடிட்டிங் டூலாக பார்க்கப்படுகிறது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பலர் கிரியேட்டிவாக எடிட் செய்திருப்பதை பார்த்திருப்போம். அதற்கு எடிட்டிங் துறையில் அனுபவம் தேவைப்படும். இந்த நிலையில் இந்த சிக்கலை இந்த எடிட்ஸ் செயலி போக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எடிட்டிங் செய்ய சில செயலிகள் கட்டணங்கள் வசூலிக்கின்றன. இன்ஸ்டாவில் கட்டணம் இல்லாமல் இலவசமாக எடிட் செய்துகொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இந்த எடிட்டிங் ஆப் மூலம் பல கிரியேட்டர்கள் உருவாகலாம் என்று கூறப்படுகிறது.

இன்ஸ்டாவின் இந்த எடிட்ஸ் ஆப்பில் என்ன ஸ்பெஷல்?

  • மெட்டா நிறுவனம் தற்போது க்ரியேட்டர்களை வளர்க்க தீவிரமாக செயல்படுகிறது. அந்த வகையில் இந்த எடிட்ஸ் செயலி வீடியோக்களை எளிமையாகவும் அதே நேரம் கிரியேட்டிவாகவும் எடிட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலியின் UI மிகவும் நேர்த்தியானது. உதாரணமாக நீங்கள் ஒரு ஆரம்ப நிலை க்ரியேட்டராக இருந்தாலும், அல்லது நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டா லெஜெண்டாக இருந்தாலும்  உங்களுக்கு ஏற்ற வகையில் வீடியோவை எடிட் செய்யலாம்.
  • வீடியோவை எடிட் செய்ததும் நேரடியாக இன்ஸ்டாகிராமில் நேரடியாக ரீல்ஸாகவும் ஸ்டோரியாகவும் பகிரலாம். தனியாக டவுன்லோடு செய்து அப்லோடு செய்ய வேண்டியதில்லை.
  • வீடியோ எடிட்டிங்கிற்கான நேரத்தை குறைத்து, உங்கள் கற்பனை, ஐடியா போன்றவற்றுக்கு அதிக நேரம் செலவழிக்கலாம்.

இன்ஸ்டாவின் புதிய எடிட்ஸ் ஆப்

 

முக்கிய அம்சங்கள்

  • வேறு எந்த தளங்களிலும் எடிட் செய்தாலும் வாட்டர் மார்க்குடன் வரும். ஆனால் இந்த எட்டிஸ்ல் வாட்டர் மார்க் வராது. இதனால் ஒரிஜினல் வீடியோ போல அப்லோடு செய்யலாம்.
  • ஏஐ அனிமேஷன் மூலம் கிரீன் ஸ்கிரீன் இல்லாமலே உங்களது வீடியோவின் பேக்ரவுண்டை மாற்றலாம்.
  • வீடியோவின் தரத்தை இழக்காமல் உங்கள் வீடியோ என்ன குவாலிட்டியோ அதனை நேரடியாக அப்லோடு செய்யலாம்.
  • அதே போல பேக்ரவுண்ட் நாய்ஸை நீக்கி நல்ல கிளாரிட்டியான சவுண்டுடன் அப்லோடு செய்யலாம்.
  •  வீடியோக்களுக்கு நீங்கள் விரும்பும் மொழிகளில் சப்டைட்டில் உருவாக்க முடியும்.

எடிட்ஸ் ஆப்பை எப்படி பயன்படுத்துவது?

  • ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரில் எடிட்ஸ் ஆப்பை டவுன்லோடு செய்யவும்
  • உங்கள் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்யவும்.
  • உங்கள் மொபைலில் இருந்து நேரடியாக வீடியோக்களை அப்லோடு செய்யலாம்.
  • எடிட்டிங் பேனலுக்கு சென்று உங்கள் வீடியோக்களுக்கு ஏற்ற வகையில் ஏஐ அனிமேஷன், பேக்ரவுண்ட் மாற்றம், ஃபில்டர்ஸ் போன்ற அம்சங்களை பயன்படுத்தலாம்.
  • பின்னர் வாட்டர் மார்க் இல்லாமல் எக்ஸ்போர்ட் செய்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற தளங்களில் பகிரலாம்.

2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?
2025-ல் உயிர்வாழ தகுதியான நகரங்கள் - முதல் இடத்தில் எந்த நகரம்?...
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்...
அந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது எனக்குஅசௌகரியமாக இருக்கும்......
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...